தாராயோ தங்க நிறம்
தயவாய்க் கேட்கிறேன்;
சீராகும் என் நிறமும் ஒரு
சிட்டிகை தந்திட்டால்...
எனது தங்க மீன்கள், அவ்வப்போது நிழல்ப்படக்கருவியுடன் நீண்ட நேரம் அவற்றிற்கு முன்னாலிருந்து அவை செய்யும் குறும்புகளையும் அவை தரும் கண்ணுக்குக் கவர்ச்சியான நிலைகளையும் (pose) படமாகப் பிடித்து வைப்பேன். இந்த நிலை அவற்றில் ஒன்று.
இந்த இரண்டு மீன்களுக்குமிடையில் ஏதோ சண்டையோ.. என்னவோ...
ஆனால், அவை நின்ற விதத்தைப் பார்க்கும் போது, எனக்கு வீட்டில் நாங்கள் ஒருவர் பொருளை ஒருவர் எடுத்துப் பாவிப்பதற்கு மன்றாடுவோம், போராடுவோம், தாஜா பண்ணுவோம்... எவ்வளவோ நடக்கும் எங்களது வீட்டில்...
அது ஞாபகம் வரவே அவற்றின் நிலையை வைத்து இப்படி எழுதினேன்...
சுஜி...
இன்னும் பல எனது தங்க மீன் படங்களின் தொகுப்பு இந்த 'யூற்றியுப்'இலுள்ளது.
இணைப்பை க்ளிக் செய்து பாருங்கள்

No comments:
Post a Comment
எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...