Friday, 1 April 2016
Thursday, 24 March 2016
Tuesday, 8 March 2016
Monday, 29 February 2016
படிக்காத மனைவி - பாகம் 7 'தனிமை' தொடர்ச்சி...
இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.
அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).
உணர்ச்சிகள் உலகிலுள்ள அனைவருக்கும் பொது. அவரவர் தன்மைக்கேற்ப அவர்கள் தம் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் தன்மை வேறுபடுகிறது.
தனிமை தொடர்ச்சி...
“Haiii Sweeetiii... What's up...” என்றாள் சொல்வி, கொஞ்சும் குரலில்.
“Hello, could I speak to mr. Arul please...(ஹெலோ... நான் அருளோட கதைக்கலாமா... )?” என்றது ஒரு இளம்பெண் மறுமுனையில்...
அந்தப் இளம்பெண்ணின் குரலையும், அவளது ஆங்கிலம் கதைத்த அழகையும் கேட்டபோது, சொல்வி அதிர்ந்துபோனாள். அருளானந்தனுக்கு இன்னொருத்தியும் இருக்கிறாளா...
‘Oh... Jesus... Oh... Jesus இது உண்மையா இருக்கக் கூடாது...
இது உண்மையா இருக்காது... அருளை எனக்குத் தெரியும்...
அவன் அப்படிச் செய்யமாட்டான்... ’என மனதுக்குள் கடவுளை மன்றாடினாள்... தனக்குத் தானே சொல்லிக்கொண்டும் ஒருவாறு தைரியத்தை வரவழைத்துக்கொண்டும்
“Hello..., Arul is not here at the moment...” (ஹெலோ... அருள் இப்ப இங்க இல்லை... ) என்றாள் சொல்வி.
சொல்வி சொல்லி முடிக்கு முன்னரே,
“Oh... My... God... Oh... My... God ... please... please let me talk to him please I beg you...” (ஓ... என்ர கடவுளே... தயவு செய்து... தயவு செய்து அவரோட என்னக் கதைக்க விடுங்க... நான் உங்கள மன்றாடிக் கேக்கிறன் தயவு செய்யுங்க...) என்றது அந்தப் பெண் குரல் சொல்வியிடம் மன்றாடியது. மன்றாடியது மட்டுமல்ல, அந்த இளம்பெண்ணின் குரல் தழுதழுத்தது. அழுது விடுவாளோ என்றிருந்தது சொல்விக்கு.
சொல்விக்கு என்ன சொல்வதென்றெ தெரியவில்லை... தனது கனவுகளெல்லாம் தவிடு பொடியாகிக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்தாள். ஆண்கள் எல்லோருமே இப்படித்தானா... அவளும் ஒரு பெண்தானே... அவள் எங்கே இருக்கிறாளோ... அவளுக்கும் இவனுக்கும் எப்படித் தொடர்பு வந்தது... ஏற்கனவே அருளானந்தனுக்கு இலங்கையில் திருமணம் நடந்து விட்டதா... அப்படியும் ஒரு கதை வாசித்தது சொல்வியின் ஞாபகத்துக்கு வந்து அவளை இன்னும் குழப்பியது.... என ஏதேதோ மனத்தில் நினைத்துக் குழம்பியவளாக,
“How do I explain to you... Arul is not at his home right now... he went to Oslo with a friend... Believe me... (நான் எப்பிடி உனக்கு விளங்கப் படுத்துவன்... அருள் அவற்ர வீட்டில இந்த நேரம் இல்லை... அவர் ஒஸ்லோவுக்கு ஒரு நண்பனோட போயிட்டார். என்ன நம்பு...) ” என்றவளை இடைமறித்து,
“You don't understand our sitation, do you...? Please help... Please let me talk to him... ( எங்கட நிலை உனக்கு விளங்கேல்ல என்ன... தயவு செய்து... தயவு செய்து என்ன அவரோட கதைக்க விடு...) ” என ஒரு கணம் அதிகாரமாகவும் மறுகணம் தயவாகவும் கெஞ்சியது அந்தப் பெண் குரல்.
“Believe me, if Arul is in this city, I promis I can bring to you and I have lot of questions also to him. Believe me Arul is not.... Hello... Hello.... (என்ன நம்பு அருள் இந்த நகரத்தில இருந்தா... சத்தியமா இங்க கூட்டியருவன்... எனக்கும் நிறைய அவரட்ட கேட்க இருக்கு... ஹலோ... ஹலோ...)” சொல்வி சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.
சொல்விக்கு நடந்ததெல்லாம் கனவா இல்லை, நிஜம்தானா என உணர முடியாமலிருந்தது. தொலைக் காட்சியைப் பார்த்தபோது, தொலைக் காட்சிக்குத் தொடர்பில்லாததால், புள்ளிகள் விழுந்த படி ஒரே இரைச்சலோடு இருந்தது.
சொல்விக்கும் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைப் போலவே தனது கனவுகளும் எண்ணங்களும் புள்ளி விழுந்து, ஒரே இரைச்சலாக இருப்பது போல உணர்ந்தாள்.
‘என்னென்னவோ கனவுகளோடு இருந்தேனே... அவ்வளவும் கலைந்து போய்விட்டதே... அருளானந்தனோடு இந்தியமுறைப்படி திருமணம் செய்ய வேண்டும்... நானும் சேலை கட்டி, பூவைத்து, பொட்டு வைத்து, நகைகள் எல்லாம் போட்டு... எத்தனை கனவுகள்.
எங்களுக்குப் பிறக்கும் குழந்தைகளின் அழகு, நிறம், அறிவு எல்லாவற்றையும் சஞ்சிகைகளில் பார்த்துப் பார்த்து கத்தரித்த குழந்தைகள் படங்கள் எவ்வளவு... அத்தனையும் காற்றில் கட்டிய கோட்டைதானா...?’ எனத் தன்னைத் தானே மீண்டும் கேட்டுக் கொண்டே புள்ளி விழுந்து இரைச்சலோடிருந்த தொலைக்காட்சியைப் பார்த்த வண்ணம் இருந்தாள் சொல்வி சிறிது நேரம். அவளுக்கு தன்னை ஒரு இருள் சூழ்ந்தது போல இருந்தது.
போர்வையை உதறி எறிந்தவள் எழுந்து தொலைக் காட்சியை நூர்த்து விட்டு, குளியலறைக்குச் சென்று கண்ணாடியில் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் குளியலறைக் கண்ணடிக்கு முன்னால் நின்றால்; அவள் பின்னே வந்து அவளை இறுகக் கட்டியணைத்து கழுத்தில் முத்தமிடுவது அருளானந்தனின் வழமை.
அந்த நினைப்பில், திடீரென கண்ணாடியில் தன் பின்னால் பார்த்தாள் சொல்வி. அங்கே யாருமில்லை. நீண்டதொரு பெருமூச்சுடன் பல் துலக்கி முகம் கழுவிய பின்னர், குளியல்க் கூடத்தில் நீர் விசிறியைத் திறந்து தண்ணீர்த் திவலைகளில் கையைப் பிடித்து, நீரின் சூட்டைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அந்தக் குளியல்க் கூடத்தில் அருளானந்தன் இல்லாமல், அவனது குறும்புகள் இல்லாமல் குளித்த நாட்கள் குறைவு.
அவள் குளித்துக் கொண்டிருக்கும் போதே, ‘யாரந்தப் பெண்... அவளுக்கும் அருளுக்கும் என்ன உறவு... அதை எப்படி அறிவது...’ என சிந்தனை ஓடியது.
இதை, அவனது நண்பர்களுக்கோ தனது சிநேகிதியருக்கோ தெரியப் படுத்தக் கூடாது என திட்ட வட்டமாக நினைத்துக் கொண்டாள்.
‘ஆனால், அப்படியென்றால் அவள் யார்... அவளுக்கும் அருளுக்கும் என்ன தொடர்பு என எப்படி அறிவது... அருளானந்தன் வந்த பின் அவனையே கேட்போம்... அவனது பதில், அதன் பின் அவளுக்கு அருளானந்தனையே தொலைபேசியில்க் கதைக்க வைத்த பின்னர் என்ன செய்யலாம் என முடிவெடுக்கலாம்...’ என ஒரு முடிவுக்கு வந்தாள் சொல்வி.
“என்ர dreams எல்லாம் போச்சு... பறவாயில்லை... இந்தளவில தெரிஞ்சது...” என சத்தமாகவே தனக்கு தானே சொல்லிக் கொண்டு குளிருடைகளை அணிந்தாள் சொல்வி.
அவளுக்கு யாரிடமும் அந்த நேரம் செல்ல விருப்பமிருக்கவில்லை. காரணம் இதுதான், யாரிடமாவது சென்றால் அவளது தாங்க முடியாத யோசனையை அவளது முகத்தை வைத்தே கண்டு பிடித்து, அவளிடமிருந்து தகவல்களை அறிந்து விடுவார்கள். அது அவளுக்குத் தெரியும்.
அதனால், அங்கே அவர்களது தொடர்மாடிக்கு அருகே இருந்த ஒரு கோப்பிக் கடைக்குச் சென்று சிற்றுண்டியும் உண்டு, கோப்பியும் அருந்தி அன்றைய நாழிதழையும் படித்து விட்டு வரலாம் என நினைத்தாள்.
வாசல்க் கதவுடன் சுவரில் இருந்த நிலைக்கண்ணாடியில் முகம், தலை, தலைமயிர் இவற்றைச் சரி செய்து கொண்டு குளிருக்ககுக் கழுத்தில் சுற்றும் துணியால் கழுத்தை இருதரம் சுற்றி அதையும் கண்ணாடியில்ப் பார்த்து சரி செய்து கொண்டு கதவைத் திறக்கும் நேரம் தொலை பேசியின் ரீங்கார நாதம் ஒலித்தது.
கழுத்தில்ச் சுற்றிய துணியைக் கழற்றி கதிரையில் எறிந்து விட்டு, தொலை பேசியின் ஒலி வாங்கியை எடுத்து,
“ஹலோ...”என்ற சொல்வியின் கைகள் ஏனோ நடுங்கின, குரலும் இடறியது.
“Hello, I don't have enough time or money to talk to you ... Please let me talk to Arul... Please...(ஹலோ, என்னிடம் போதுமானளவு காசோ அல்லது நேரமோ இல்லை உன்னோட கதைக்கிறதுக்கு... தயவு செய்து அருளோட என்னைக் கதைக்க விடு... தயவு செய்...)” என்றது மறு முனையில் அதே பெண்குரல்.
சொல்விக்கு கால்கள் நடுங்கின. நிற்க இயலாமல் கதிரையில் சாய்ந்தாள். நடுங்கும் கைகளால் தொலைபேசியை இறுகப் பிடித்த வண்ணம் குரலை சரி செய்து கொண்டு,
“OK... Give me your number, I call you...(ஓ. கே. உன்ர இலக்கத்தைத் தா... நான் அழைக்கிறன்) என்றாள் சொல்வி.
“No. I can't... Please let me talk to Arul.( இல்லை. என்னால முடியாது. தயவு செய்து அருளோட என்னைக் கதைக்க விடு...)” என்றது அந்தப் பெண் குரல்.
“I feel this is long distance call, and may I know from where you are calling...? (இது தூர இடத்து அழைப்புப் போல இருக்கு, நீ எங்கே இருந்து அழைக்கிறாய்...?) என்றாள் சொல்வி அதே நடுங்கும் குரலில்.
“Yes, I am calling from India, look, I don't have enough money or time to chat with you. Please let me talk to Arul...(ஓம், நான் இந்தியாவிலேயிருந்து அழைக்கிறன். இங்க பார், என்னட்ட போதுமானளவு காசும் இல்லை நேரமும் இல்லை உன்னோட அரட்டையடிக்கிறதுக்கு... தயவு செய்து அருளோட என்னைக் கதைக்க விடு...)” என்றது அந்தப் பெண் குரல்.
சொல்வி ‘இருதலைக் கொள்ளி எறும்பு’ போலத் துடித்தாள். அந்தப் பெண் இந்தியாவிலிருந்து அழைத்தால், அவர்களுக்குத் தொலைபேசிச் செலவு அதிகமாக வரும். ஆனால், இந்த முறையும் அவள் யார்... அவளுக்கும் அருளுக்கும் என்ன உறவு என அறியாமல் விட்டு விட்டால், சொல்வியின் மண்டையே வெடித்து விடும். ஆக, ஒரு துணிவுக்கு வந்தவளாக,
“Are you Arul's wife or lover trying to talk to him...? (நீ அருளடைய மனைவியா அல்லது காதலியா அவருடன் கதைக்க விரும்புகிறாய்...?)” என்று கேட்டாள் சொல்வி. ஆனால் அப்படி நினைக்கவே அவளால் முடியவில்லை. மறுமுனையில் இருக்கும் அந்தப் பெண்ணின் நிலையையும் வசதியையும் யோசித்தே அப்படித் திடீரெனக் கேட்டாள் சொல்வி.
“What...? No... no... I am his sister... Please, please let me talk to him... Please I beg you... Pritty pleeeeease... (என்ன...? இல்லை... இல்லை... நான் அவருடைய தங்கச்சி தயவு செய்து அவரோட கதைக்க விடு... நான் உன்னைக் கெஞ்சிக் கேக்கிறன்... தயவு செய்...)” என்றாள் அந்தப் பெண்.
இப்போது, சொல்வியின் தொண்டையில் ஏதோ ஒன்று அடைத்துக் கொண்டது. கண்களிலிருந்து நீர் பொல பொலவென கன்னத்தில் விழுந்து உருண்டது. அவளால் எதுவுமே சொல்ல முடியாமல்த் தவித்தாள். அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. விம்மி, விம்மி அழத்தொடங்கினாள் சொல்வி...
சொல்வியின் அழுகை ஒலி மறுமுனையில்த் தெளிவாகக் கேட்டது.
“Are You crying... Please don't cry... Why are you crying... What did I say... Please talk to me... Oh My God my brother is going to kill me... Please don't cry... (நீ அழுறியா... அழாத... ஏன் நீ அழுறாய்... நான் என்ன சொன்னன்... தயவு செய்து என்னோட கதை... என்ர கடவுளே அண்ணா வந்து என்னைக் கொலை செய்யப் போறான்...)” என்றாள் அருளானந்தனின் தங்கை ஆதங்கத்துடன்.
அருளானந்தனின் தங்கையின் குழந்தைத் தனமான கதையையும் ‘என்ர அண்ணா வந்து என்னைக் கொலை செய்யப் போறான்’ என அவளது ஏக்கம் நிறைந்த குழந்தைத்தனமான கதையையும் கேட்டவுடன், அழுகையினூடே சிரிக்கவும் செய்தது சொல்வியை.
“ஹலோ... ஹலோ...” என்றாள் அருளானந்தனின் தங்கை...
ஒருவாறாக, சொல்வி தன்னை சுதாகரித்துக் கொண்டு,
“Hello... ” என்றாள்.
“Oh... My... God... Are You crying... What did I say... I am so sorry... I just wanted to talk to Arul. That's all. It is very important... Please... (என்ர... கடவுளே... நீ அழூறியா... நான் என்ன சொன்னனான்... என்னை மன்னிச்சுடு... நான் அருளோட கதைக்கவேணும் அவ்வளவுதான். அது மிக முக்கியம்... தயவு செய்...” என்றாள் அருளானந்தனின் தங்கை மறுமுனையிலிருந்து.
“Hello, You did not mention your name... Arul's sister... May I know your name... (ஹலோ... நீ உன்ர பேரைச் சொல்லேல்ல... அருளின்ர சகோதரி...)” என்றாள் சொல்வி. சொல்வியின் குரல் பனியில் நனைந்த மலரைப் போல சிறிது அழுது ஓய்ந்து, மகிழ்ச்சியில் தோய்ந்திருந்தது.
“Thank God... now your voice is very sweet... (கடவுளே... இப்ப உன்ர குரல் நல்லாயிருக்குது...)” என்றாள் அருளானந்தனின் தங்கை...
“Oh... Thank you...” என்றாள் சொல்வி மிக மகிழ்ச்சியுடன்.
“My name is Mathimalar... Everyone call me Mathy... (என்ர பேர் மதிமலர்... எல்லாரும் மதி எண்டு கூப்பிடுவினம்...)” என்றாள் அருளானந்தனின் தங்கை.
“Hi, Mathi, I am Selvi...” எனச் சொல்வி சொல்லும்போதே இடைமறித்த அருளானந்தனின் தங்கை,
“I know your name. Arul told me...(உன்ர பேர் எனக்குத் தெரியும். அருள் சொன்னவர்...)” என்றாள் அருளானந்தனின் தங்கை.
“Oh... Whatelse Arul told you...? (ஓ... வேறென்ன அருள் உனக்கு சொன்னார்...?)” என்ற சொல்வி உடனேயே
“Give me your telephone number... I want to talk with you more... (உன்ர தொலைபேசி இலக்கத்தைத் தா... நான் உன்னோட நிறையக் கதைக்க வேணும்...)” என்றாள்
“Oh... No... I can't give you this number. This is my uncle's telephone. He doesn't like...(ஓ... நான் தரமாட்டன். மாமா அதை விரும்புறதில்லை...)” என்றாள் அருளானந்தனின் தங்கை மதிமலர்.
“I'm living next to Arul you know... Lately, He is thinking too much and..., so not normal... I want to know why... Please Mathy... I won't make nuisance calls. Believe me... I swear... pinky swear. (உனக்குத் தெரியும் நான் அருளுக்குப் பக்கத்தில இருக்கிறது... அவர் கடுமையா யோசிக்கிறார்... மற்றது...அவற்ர போக்கு இப்ப நல்லாயில்ல... அது ஏனெண்டு தெரியவேணும். தயவு செய் மதி... நான் அனாவசியமா தொலைபேசியில தொல்லை கொடுக்க மாட்டன். நான் சத்தியம் பண்ணுறன்... ‘பிங்கி ஸ்வயர்’ )” என்றாள்.
கடைசியில் சிறு குழந்தைகள் தங்களுக்குள் சத்தியம் செய்வது போலச் பிங்கி ஸ்வயர் எனச் சொன்னாள் சொல்வி.
மறுமுனையில் மதிமலர் சிரிப்பது துல்லியமாக சொல்விக்குக் கேட்டது.
சொல்வியும் சேர்ந்து சிரித்தாள்.
“Why are you laughing...? I'm so so scared when I look at him...(ஏன் நீ சிரிக்கிறாய்...? எனக்கு சரியான பயமா இருக்கு அவனைப் பாக்கேக்க...)” என்றாள் சொல்வி மிகுந்த ஆதங்கத்துடன்.
“We used to make pinky swear in our childhood... That's what I laughed. Sorry... Yes..., I also wanted to talk with Arul... could you please help me. (நாங்கள் ‘பிங்கி ஸ்வயர்’ எண்டு சொல்றது சின்ன வயசில. அதாலதான் சிரிச்சிட்டன்... மன்னிச்சுக்கொள்ளு... நானம் அருளொட கதைக்கவேணும்... தயவு செய்து உதவி செய்...)” என்றாள் மதிமலர், அருளானந்தனின் தங்கை.
“Please... I want to talk with you so much about Arul. Please give me this telephone number... Please. (தயவு செய்... நான் உன்னோட நிறைய அருளைப் பற்றிக் கதைக்க வேணும். தயவு செய்து இந்தத் தொலைபேசி இலக்கத்தைத் தா...)” என்று இரந்து மதிமலரைக் கேட்கும்போது, சொல்விக்குக் குரல் தழுதழுத்தது. அழுகையே வந்துவிடும் போல இருந்தது.
“OK... OK... I also wanted to talk with someone there... But you should promise me, that you won't use this telephone number any other times (ஓகே... ஓகே... நானும் யாரேனும் ஒருத்தரோட அங்க கதைக்க வேணும்... ஆனா, நீ எனக்கு சத்தியம் பண்ண வேணும் வேறொருக்காலும் இந்தத் தொலைபேசிய பாவிக்க மாட்டனெண்டு...)” என்று வலியுறுத்தினாள் மதிமலர்.
உடனேயே
“I swear... I swear...” என்றாள் சொல்வி.
“Country Code is 91...” என சொல்லத் தொடங்க, சொல்வி நடுங்கும் கைகளோடு அதை எழுதிக் கொண்டாள்.
உடனேயே,
“Hei Mathi.. Malar..., stay there with telephone, I will call you right now... (ஹேய் மதி... மலர்... ரெலிபோனோடயே நில்லு, நான் உடனேயே கூப்பிடுறன்...)” என்றாள் சொல்வி அதே தழுதழுத்த குரலில்.
“ஓ.கே...” என மதிமலர் சொல்லும்போதே சொல்வி தொலைபேசியைத் துண்டித்துவிட்டு, நடுங்கும் கையில் இருந்த தொலைபேசியில் எண்களை அமுக்கினாள். கண்களில் நீர் திரையிட்டது. இலக்கங்கள் யாவும் இரண்டாகத் தெரிந்தது சொல்விக்கு, இருந்தும் கண்ணீரை துடைக்க நேரமில்லாமல் இமைகளை பலமுறை மூடித்திறந்து கொண்டே எண்களை அமுக்கினாள்.
தொலைபேசியைக் காதில் வைத்தபோது, இந்தியாவில் தொலைபேசி மணி அடிக்கும் அந்த இரட்டை ஒலிக்குறிச் சத்தம் சொல்விக்கு புதுமையாக இருந்தது. இனிமையாக இருந்தது. கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை மறு கையால்த் துடைத்தபடி குரலைச் சரி செய்யும்போதே,
மறுமுனையில் மதிமலர்,
“ஹலோ...” என்றாள்.
“ஹலோ மதி மலர்...” என சொல்லும்போது, சொல்வி அழுதே விட்டாள்.
“Selvi... Are you crying... (செல்வி... அழுறியா...)” எனக் கேட்டாள் மதிமலர், மிகுந்த ஆதங்கத்துடனும் ஆச்சர்யத்துடனும்.
இனியும் தன்னால் தன்னிலையை மறைக்க முடியாது எனத் தெரிந்த சொல்வி,
“Yes... I am... crying... (ஒம்... நான்... அழுறன்...)” என்றவள் விம்மி விம்மி அழத்தொடங்கினாள்.
மறுமுனையில் அதைக் கேட்டுக் கொண்டிருந்த மதிமலர்,
“Why are you crying... so much... I am so sorry... (ஏன் இவ்வளவு அழுறாய்... என்னை மன்னிச்சுடு)” என மிகவும் ஆதராவகச் சொன்னாள் மதிமலர்.
ஒருவாறாகத் தன்னை அமைதிப்படுத்தி, கண்களைத் துடைத்துக் கொண்ட சொல்வி,
“I also wanted to talk with someone there... When you agree, I couldn't hold my feelings inside... (நானும் யாராவது அங்க ஒருவரோட கதைக்கவேணும் எண்டு இருந்தனான்... நீ ஓம் எண்டவுடனே என்னை நான் கட்டுப் படுத்தேலாமப் போச்சு...)” என்றாள் சொல்வி இப்போதும் தழுதழுக்கும் குரலுடன்...
சொல்விக்கு, அருளானந்தனின் தங்கையோடு கதைக்கப் போகிறோம்... அவள் தன்னை ஏற்றுக் கொள்ளவாளா... என்ற அச்சமும் அதே நேரம், ஆனந்தப் பரவசமுமே அவளுக்கு அழுகையைக் கொண்டு வந்தது.
(தொடரும்)

Labels:
உண்மைச்சம்பவம்
Monday, 12 October 2015
Saturday, 29 August 2015
படிக்காத மனைவி - பாகம் 6 'தனிமை'
இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.
அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).
மனதுக்குப் பிடித்தவரை சில மணிநேரம் பார்க்காமல் இருந்தாலே அது யுகங்களாகத் தோன்றும். இது, பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும்...
தனிமை
அன்றைய தொலைபேசி அழைப்பின் பின், அருளானந்தன் அமைதியை இழந்து தவித்தான். எதையும் சொல்வி கேட்டால்; எரிந்து விழுந்தான். சொல்வியும் அவனது நிலையால் அவளும் குழம்பித் தவித்தாள்.
அருளானந்தனுக்கு எந்த வகையில் ஆறுதல் கூறலாம்... அல்லது எந்த வகையில் அவனுக்கு உதவலாம் என யோசித்துக் குழம்பிப் போயிருந்தாள் சொல்வி. எதையும் அருளானந்தனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாமல்த் தவித்தாள்.
காரணமில்லாமல் சிடுசிடுத்தான் அருளானந்தன். முன்னரெல்லாம், சொல்வியைச் சாப்பிட விடாமல் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். அதற்காகவே அவன் வரும் வரை சாப்பிடாமல் காத்திருப்பாள் சொல்வி.
கணவர் உணவு உண்ணும் வரை காத்திருந்து, கணவர் உண்ட இலையில் உணவு உண்பது தமிழ்ப் பெண்கள் வழமை... - இன்று அதெல்லாம் அருகி வருகிறது. -
ஒருவர் உணவு உண்ணும்போது, அவருக்கு அருகில் இருந்து இன்னொருவர் உணவு பரிமாற வேண்டும். இது கணவன் உண்ணும்போது மனைவியும், மனைவி உணவு உண்ணும் போது கணவனும் உணவு பரிமாறுவது வழமை.
நாம் உணவு உண்ணும்போது, விரல்களால் உண்போம். ஏதாவது மேலதிகமாகத் தேவையெனில் அதை அருகில் இருந்து உணவு பரிமாறுபவர் எடுத்துத் தருவார். இதனால் உணவு உண்ட கையினால் அகப்பை முதலியவற்றை பிடிப்பதும் தவிர்க்கப் படுகிறது.
இவற்றை விட,
கணவன் உண்ட மீதம் மனைவி உண்பதும், மனைவி உண்ட மீதம் கணவன் உண்பதும் தாம்பத்திய நெருக்கத்தை இன்னும் மிகைப்படுத்தும். ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஒரு கிளுகிளுப்பைத் தரும்.
அதெல்லாம் சொல்விக்குத் தெரியாது.
அருளானந்தன் வரும்வரை சொல்வி காத்திருப்பது, அவனது கலகலப்பான பேச்சிலும் இடைவிடாத நகைச்சுவையிலும் அவள் தன்னை மறந்து சிரித்துச் சிரித்து சாப்பிட வேண்டும். அதுதான் அவளது விருப்பம்...
ஆனால்...
“என்னை சாப்பிட விடு அருள் பசிக்குது...” எனக் கெஞ்சுவாள்.
“சரி... சரி... நீ சாப்பிடு...” என சில நிமிடங்கள்தான் பார்த்துக் கொண்டிருப்பான்; பின்னர் ஆரம்பித்துவிடுவான்.
அவளும் அவன் சிரிக்கச் சிரிக்க கதைத்துக் கொண்டிருக்கும்போதே சாப்பிட விரும்புவாள். மனமும் வயிறும் நிறைந்தது போல இருக்கும்.
பல மேலை நாட்டுப் பெண்கள், கணவர் அல்லது காதலர் வீடு வருமுன்னரே தமக்குப் பசித்தால், அவர்கள் உண்டு விட்டு உறங்கியும் விடுவார்கள்,
ஆனால்
சொல்வி அப்படிப் பட்டவளில்லை. சொல்வி உணவு உண்ணும்போது, யாராவது ஒருவரோடு சேர்ந்திருந்துதான் உணவு உண்பாள். நோர்வேயில் இருந்தபோது, ஹன்னா இவளுக்குத் துணையாக இருந்தாள். சுவீடன் வந்த பின்னர் எப்போதுமே அருளானந்தனுடன்தான் உணவு உண்பாள்.
அருளானந்தன், அவனது நண்பர்களோடு அரட்டையில் இருந்தால், அவளும் உணவு உண்ணாமலே உறங்கிவிடுவாள்.
“நான் வாறதுக்கு முன்னமே நீ சாப்பிடலாமே... ஏன் சாப்பிடாமல இருக்கிறனீ...” எனக் கேட்டான் ஒரு நாள் அருளானந்தன்.
“அது முடியாது... நீயும் இருந்து என்னோட சாப்பிட வேணும்... கதைக்க வேணும்... சிரிக்க வேணும் நானும் சாப்பிட வேணும்... அதுதான் எனக்குப் பிடிக்கும்.” என்றாள்.
“தமிழில இதுக்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க... ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ எண்டு” என்றான்.
பழமொழி சொன்னதோடு நிறுத்திவிடாமல் அதற்கு விளக்கமும் சொன்னான் அருளானந்தன்.
“எனக்கு உன்னோட இருந்து சிரிச்சுக் கதைச்சு சாப்பிட வேணுமெண்டதுதான் ஆசை. அதுக்கு நீ இப்பிடி ஒரு அருத்தம் சொல்லுவாயெண்டால் சொல்லு... பறவாயில்லை” என்றாள் சொல்வி
“Heeeiii, நான் பழமொழிதானே சொன்னனான்... அதுக்குப்போய் இப்பிடி குழம்புறியே...” என ஆறுதல் சொன்னான்.
ஆனால்,
அந்தத் தொலைபேசி வந்த அன்றிலிருந்து, அவனிடம் அந்த நகைச்சுவை, குறும்பு, சின்னச் சின்னச் சிலுமிசங்கள், சின்னச் சின்னச் சீண்டல்கள், சின்னச் சின்னச் சிணுங்கல்கள் எல்லாம் இல்லாமல்ப் போயிருந்தது.
இருவரும் ஏதோ அன்னியர் இருவர் எதிரும் புதிருமாக இருந்து உணவு உண்பது போல உணவு உட்கொள்வார்கள்.
தொலைக்காட்சி கூட இருவரும் கூட இருந்து பார்ப்பதில்லை.
அன்று ஒரு புதன்கிழமை இருவரும் மறுநாள் காலை வழமை போல பல்கலைக் கழகம் செல்லவேண்டும், அதனால் சிறிது நேரத்துடனே அருளானந்தனும் சொல்வியும் படுக்கைக்குச் சென்றனர்.
படுக்கும் போது, எப்போதுமே; அருளானந்தன் எப்படிப் படுத்திருந்தாலும் - நிமிர்ந்து, சரிந்து, கவிழ்ந்து - சொல்வி அவனுக்கு மேல் ஒரு கையும் ஒரு காலும் போட்டபடிதான் படுத்துறங்குவாள்.
அனேகமாக, அருளானந்தன் நிமிர்ந்தே படுப்பவன். அவன் அப்படிப் படுத்திருந்தால், சொல்வி ஆசையாக அருளானந்தனது இடது கை புஜத்தில் தலை வைத்தபடி தனது இடது கையால் அருளானந்தனது மார்பை இறுக அணைத்தபடியும் இடது காலை அவனது கால்களுக்குக் குறுக்காக எறிந்தபடிதான் உறங்குவாள்.
ஆனால் அன்று அவள் அப்படிப் படுக்கவில்லை. தனது கரையில், அருளானந்தனைப் பார்க்கு முகமாக படுத்து கண்களை வலுக்கட்டாயமாக மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.
அந்த நிலையில் சொல்விக்கு நித்திரை வர மறுக்கும். நித்திரை வர மறுத்தது.
அருளானந்தன் என்றுமே ‘கும்’ என்ற இருட்டில் படுக்க மாட்டான். ஏதாவது சிறிய வெளிச்சம் படுக்கை அறையில் இருந்தே ஆக வேண்டும். அதனால், சொல்வியே இரண்டு வெளிர் நீல மின்சார விளக்குகளைப் பொருத்திருந்தாள். அவை கண்களை உறுத்தாது, ஆனால் ஒரு மென்மையான ஒளி பரப்பிய வண்ணமிருக்கும்.
அந்த வெளிச்சத்தில் சொல்வி, இடையிடையே கண் விழித்து, அருளானந்தனைப் பார்த்தாள். அவனோ ஆசையாக அவள் தலை வைக்கும் இடது கையை தனது தலைக்கு மேல் வைத்தபடி படுத்திருந்தான்.
இரவு நேரம் பத்து மணியிருக்கும், அருளானந்தனும் சொல்வியும் ஒருவரை ஒருவர் தொடமல்ப் படுத்திருந்த நேரம், தொலைபேசி ரீங்காரமாக ஒலித்தது.
அருளானந்தன் தமிழில்த் தொலைபேசியில்க் கதைத்தான். சொல்வி கேட்டுக் கொண்டே கண்களைத் திறக்காமல் படுத்திருந்தாள்.
“பொறு! அவள் படுத்திருக்கிறாள். நித்திரையெண்டா எழுப்ப மாட்டன். நித்திரையில்லாட்டி, கேட்டுட்டுச் சொல்றன்” என்ற அருளானந்தன் மெல்ல எட்டி சொல்வி போர்த்திருந்த அந்த தடித்த குளிர்காலப் போர்வையில்க் கை வைத்து, மிக மென்மையான குரலில்
“சொல்வி” என அழைத்தான்.
அருளானந்தன் தன்னைத் தொடும்வரை காத்திருந்த சொல்வி, கண்களைத் திறந்து அருளானந்தனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு சலனமும் இல்லாதிருந்தது.
“Heeii, ரகு, காரில நாளைக்கு காலமை ஒஸ்லோ போறானாம்... எங்கள் ரெண்டு பேரையும் வரட்டுமாம்...” என அருளானந்தன் சொல்லி முடிப்பதற்குள்,
“நீ தேவையெண்டா போயிட்டு வா... எனக்கு வர ஏலாது.” என்றாள் சொல்வி, இப்போதும் ஒரு சலனமுமில்லாது.
அப்போது, அருளானந்தன் அவளுக்கு அருகில் வந்து, அவளுக்கு மேலே வலது கையைத் தொலைபேசியோடு வைத்துக் கொண்டும் சொல்வியின் முகத்துக்கு மிக அருகில் தனது முகத்தை வைத்துக் கொண்டும்,
“ஹேய்... உனக்கு சுகமில்லையா... அப்பிடியெண்டா நானும் போகேல்ல...” என்றான் மிகுந்த ஏக்கத்துடன்.
“அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை...” என்றவள், சைகையால் அருளானந்தன் வைத்திருந்த தொலை பேசியைக் காட்டினாள்.
“ஓ...” என்ற அருளானந்தன் சொல்வியை விட்டு உருண்டு வந்து, தொலைபேசியில்க் கதைத்தான்.
தொலைபேசியில்க் கதைத்து முடித்த பின், தன்னை முரட்டுத்தனமாக இழுத்து அணைத்து, முத்தம் தருவான். இந்த இரவு இனிமையான இரவாக விடியும் எனக் காத்திருந்தாள் சொல்வி.
ஆனால்,
அவள் எப்போது நித்திரைக்குப் போனாள் என்பது அவளுக்கே தெரியாது. காலையில் அருளானந்தன் அவளை எழுப்பிய போதுதான் கண் விழித்தாள்.
கையில் ஒரு குவளை கோப்பியுடன் சொல்வி அருகில் கட்டிலில் அமர்ந்திருந்தான் அருளானந்தன். அருளானந்தன் ஒஸ்லோ செல்வதற்கு ஆயத்தமான நிலையில் இருந்தான்.
“Heeiii, Good Morning...” என்றாள் சொல்வி அவளது மாறத புன்சிரிப்புடன்.
“Good Morning Sweetie...” என அருளானந்தனும் மலர்ந்த முகத்துடன் சொன்ன போது, சொல்விக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.
“Are you ready for big journey? (உன்ர நெடுந்தூரப் பயணத்துக்கு தயாரா...)” எனக் குறும்பாகக் கேட்டாள் சொல்வி.
“ஹேய் உனக்குச் சுகமில்லையெண்டா... சொல்லு நானும் போகேல்ல...” என்றான் அருளானந்தன்.
“எனக்கொண்டுமில்லை... I'm fine... Why? (நான் சுகமாயிருக்கிறன்... ஏன்...) ” என்றாள் சொல்வி.
“இல்லை நீ இந்த ‘ட்ரிப்’(trip)க்கு வரமாட்டன் எண்றாய் அதாலதான் கேட்டன்.” என்றான் அருளானந்தான்.
“நானும் நீயும் தனிய ‘ட்ரிப்’புகள் போகேக்க இருக்கிற சந்தோஷம் இன்னொருத்தரோட போகேக்க இருக்காது... அதைவிட, நான் ஒஸ்லோவுக்குப் போனா, எங்கட வீட்டுக்குப் போகாம வரமாட்டன். அதுக்கு ரகு ஒத்துக் கொள்ள மாட்டான்.
ஏன் வீணா உன்ர ‘ப்ரெண்டுக்கு’ (friend) தொல்லை கொடுப்பான் எண்டுதான் வரேல்ல எண்டனான்.” என்று சொல்லிக் கொண்டே சொல்வி படுத்திருந்த படியே அருளானந்தனின் கையைத் தடவிக் கொண்டிருந்தாள்.
“ம்...ம்... நீ சொல்றதும் சரிதான்” என அவள் சொன்னதை ஆமோதித்த அருளானந்தன்,
“ரெண்டு நாளும் என்ன செய்யப் போறாய்” எனக் கேட்டான்.
“கீழ் மாடியில, ஒரு ஆபிரிக்க நாட்டுக் காரன் இருக்கிறான். அவனோட போய்...” என சொல்வி முடிக்குமுன்பே
“Heeii..., that's good idea... Go and have fun... (ஹேய்..., அது நல்லதொரு யோசனை... போ... சந்தோஷமாயிரு...)” என்று சொல்வியைப் பார்த்து ஒரு கண்ணைச் சிமிட்டியபடி இரட்டை அர்த்தத்தில் சொன்னான் அருளானந்தன்.
அருளானந்தனும் இதே போல சொல்வியைச் சீண்டுவதுண்டு, அதனால் அவள் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போகவில்லை. இன்னும் அவள் சொன்னதற்கு மேலாகச் சொன்னான்.
சொல்வி விரல்களை மடக்கிக் கொண்டு, கையினால் ஓங்கி ஒரு குத்துக் குத்தினாள், அருளானந்தனின் இடது புஜத்தில்.
“ஆ...உவ்... வலிக்குதடி” என்று தமிழில் கத்திக் கொண்டு அவள் அடித்த இடத்தை மறு கையால்த் தேய்த்து விட்டான்.
“வளி...குது... Oh... pain... that's good (ஓ... வலி... அது நல்லது) எனச் சொன்ன சொல்வி தொடர்ந்து,
“அருள்... உன்னைத் தவிர நான், வேற யாரட்டையும் போவன் எண்டு நினைக்கிறியா...” என ஆதங்கத்தோடு கேட்டாள்.
“Heeeiii, don't be silly...” என சொல்வியின் முகத்தருகே குனிந்து,
“எனக்குத் தெரியும் நீ வீம்புக்காகக் கதைக்கிறாயெண்டு, அதுதான் நானும் அப்பிடிச் சொன்னன்” எனும் போதே, அழைப்பு மணி அடித்தது.
அப்படியே ஒரு சிறிய முத்தம் தருவான் என எதிர்பார்த்த சொல்வி ஏமாந்தாள்.
சொல்வியின் கண்கள் கலங்கிவிட்டதைக் கவனிக்காத அருளானந்தன், ஓடிச் சென்று வாசல்க் கதவருகில் இருந்த, பிரதான வாசல்க் கதவைத் திறக்கும் ஆளியோடிருந்த ஒலி வாங்கியை எடுத்து,
“ஹேய்...ரகு... உள்ள வாறியா... அல்லது நான் வரட்டுமா... ” எனக் கேட்டான்.
மடிக் கட்டிடத்தின் பிரதான வாசலில் நின்றிருந்த ரகு, மாடிக் குடியிருப்புகளின் எண்களோடிருந்த பலகையில் பொருத்திய ‘மைக்’ (microphone) அருகில் வந்து,
“நீ வாவென் பிறகேன் நான் உங்க வருவான். நான் காருக்குள்ள இருக்கிறன் வா” என்றான்.
“சரி வாறன்...” என ஒலி வாங்கியை அதனிடத்தில் பொருத்தி விட்டுத் திரும்பியபோது அங்கே நின்றிருந்த சொல்வி,
“நான் ஒண்டு கேட்பன் நீ தருவியா... ” என்றாள் மிகுந்த ஆதங்கத்தோடும் ஏக்கத்தோடும்.
“ஹேய்... என்ன இப்பிடிக் கேக்கிறாய்... சொல்லு...” என்ற அருளானந்தன் அவளது இரு தோழ்களிலும் கைகளை ஆதரவாக வைத்தான்.
“எனக்கொரு ‘கிஸ்’ தா...” என்றவளது கண்கள் மீண்டும் பனித்தன.
உடனே சொல்வியை இழுத்து இறுக அணைத்து,
“I'm a stupid Sølvi, I'm so sorry...(நானொரு முட்டாள் சொல்வி... என்னை மன்னிச்சிடு...)” என்றவன், அவளது கழுத்தை ஒரு கையாலும் அவளது இடையை மறு கையாலும் இறுக அணைத்து ஆழமாக நீண்ட ஒரு முத்தம் கொடுத்தான்.
சொல்வியும் அவனை தனது இரு கைகளாலும் இறுக அணைத்துக் கொண்டாள்.
அணைப்பைத் தழர்த்தாமல் அவளது முகத்தருகே தனது முகத்தை வைத்து சொல்வியைப் பார்த்து,
“Oh... My... God... You smell sooo good... And in this lingerie, you look like an angel... (ஓ... கடவுளே... நீ நல்ல வாசமாயுமிருக்கிறாய்... இந்த உள்ளாடையோட நீ ஒரு தேவதை போலவும் இருக்கிறாய்...)” என்று அருளானந்தன் சொன்னபோது, சொல்வியின் முகம் மலர்ந்து, நாணத்தால் சிவந்தது.
சொல்வியும் அவனை இறுக இரு கைகளாலும் கட்டிப் பிடித்தபடியே நின்று கொண்டு,
“Thank You Arul...” எனச் சொல்லி, அவன் மார்பில் முகம் புதைத்தாள். அருளானந்தன் சொல்வியின் பொன்னிறக் கேசங்களை நுகர்ந்து அவளது உச்சியில் முத்தமிட்டான்.
“Hei, Can we have a quickie...? Before I go... (ஹேய், சின்னதா ஒண்டு செய்வமா... நான் போறதுக்கு முன்னால...) ” என்றான் ஆசையோடு அருளானந்தன்.
“ம்...ம்...ம்...” என சொல்வி அவனது மார்பிலிருந்து முகத்தை விலக்காமல் ‘ம்ம்ம்’ இராகம் இசைத்தாள்.
சொல்வி அசையாமல் அருளானந்தனின் அணைப்பில் சுகம் கண்டாள்.
“What do you say... My sweet angel...(என்ன சொல்றாய்... என் இனிய தேவதையே...)” என அருளானந்தன் சொல்வியின் காதுக்குள் கிசுகிசுத்தான்.
அருளானந்தனின் மார்பில் முகம் புதைத்திருந்த சொல்வி, திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவள் போல, நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்து,
“ரகு... வெளியில நிக்கிறான்... இப்ப வேண்டாம்... நீ வந்த பிறகு...” என்றாள் அருனாந்தனைத் தீர்க்கமாகப் பார்த்து சொல்வி.
“அவன் காருக்குள்ள இருக்கிறான்...” என அருளானந்தன் தொடருமுன், மீண்டும் அழைப்பு மணி அடித்தது.
சொல்வியை ஒரு கையால் அணைத்தபடி, மறு கையால் ஒலிவாங்கியை எடுத்து,
“நான் இப்ப வந்திடுறன் நில்லு...” என்றான் அருளானந்தன்.
அப்போ பிரதான வாசலில் நின்றிருந்த ரகு,
“நீங்க ரெண்டு பேரும் ‘அது’ செய்யுறதெண்டா செய்திட்டு வா... ஒரு பத்து பதினைஞ்சு...” என ரகு தொடருமுன்,
“ஹேய்... முட்டாள்... நான் கதவுக்குப்பக்கத்தில நிண்டு நீ மணியடிச்ச உடனே எடுக்கிறன்... என்ன சொல்லுறாய் நாங்கள் ரெண்டு பேரும் செய்யுறம் எண்டு...” என சொல்லிக்கொண்டே,
சொல்வியின் உதடுகளில் அருளானந்தன் தனது உதடுகளைப் பதித்தான்.
வாசலில் நின்றிருந்த ரகு ஏதேதோ சொன்னான். அதை அருளானந்தனோ அல்லது சொல்வியோ கேட்கவில்லை. கேட்கும் நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை.
அருளானந்தன், சொல்வியிடமிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று ஆள் உயர்த்திக்குள் (Lift) நின்று திரும்பிப் பார்த்தபோது, சொல்வி அவர்களது குடியிருப்பின் வாசலில் நின்று அருளானந்தனைப் பார்த்தாள்.
அருளானந்தன் ஒரு பறக்கும் முத்தம் தந்தான் சொல்விக்கு. பதிலுக்கு அவளும் ஒரு பறக்கும் முத்தம் தந்து கையசைத்து விடை கொடுத்தாள். அதற்கெனவே காத்திருந்தது போல, ஆள் உயர்த்தியும் தனது கதவுகளை மூடிக்கொண்டது.
சொல்வி உள்ளே வந்த உடனேயே தனிமையை உணரத் தொடங்கினாள். அவர்கள் சுவீடன் வந்திருந்த இவ்வளவு காலத்திலும் இதுவே முதல் முறையாக அருளானந்தனைப் பிரிந்து தனியே சொல்வி இருந்தாள்.
“இண்டைக்கு என்னால Universityக்குப் போகேலாது” எனத் தனக்குள் சொல்லியபடியே திரும்பவும் படுக்கையில்ப் போய் விழுந்தாள் சொல்வி.
அருளானந்தன் படுத்திருந்த தலையணையை எடுத்து அதில்த் தலை வைத்து, அருளானந்தன் கழற்றி கட்டிலில் எறிந்து விட்டுப் போன அந்த சாரத்தை எடுத்துத் தனக்கு மேல் போர்த்திக் கொண்டு படுத்தாள்.
ஆனால், அவளுக்கு நித்திரை வரவில்லை. நேரம் காலை மணி எட்டைத் தாண்டியிருந்தது.
சொல்வி நிமிர்ந்து அருளானந்தனின் சாரத்தைப் பார்த்தபோது, அருளானந்தனே அவளுக்கு மேல் படுத்திருப்பதைப் போல ஒரு பிரேமை வந்தது. அதனால் அவளது உடலெங்கும் உணர்வலைகள் கொந்தளிக்க தொடங்கியது.
அப்படியே அவனது தலையணையை எடுத்து மார்போடு இறுக அணைத்தபடி புரண்டு படுத்தாள். ஆனால், அவளுக்கு அதுவும் போதுமானதாக இருக்கவில்லை.
‘ச்சீ... என்ன இது ரெண்டு நாளில வந்துடுவான்... ரெண்டு நாள் என்னால பொறுக்க முடியாதா...’ எனத் தன்னைத் தானே சலித்துச்சொல்லிக் கொண்டாளே தவிர, அணைத்த அவனது தலையணையையும் விடவில்லை. அருளானந்தனது சாரத்தையும் நகர்த்தவில்லை. அவளால் இயலவில்லை. அப்படியே படுத்திருந்தாள்.
சிறிது நேரத்தில் மனதில் ஒரு உறுதியை வரவழைத்தவளாக படுக்கையிலிருந்து எழுந்து, அருளனாந்தன் கொணர்ந்த கோப்பியை எடுத்துப் பார்த்தாள். அது மிகவும் ஆறிப் போயிருந்தது.
அடுக்களை சென்று, கோப்பி வடிப்பானில் (Coffee maker) அருளானந்தன் வடித்து எஞ்சியிருந்த சூடான கோப்பியை தான் வைத்திருந்த குவளையில் நிரப்பி சிறிது உறிஞ்சிச் சுவைத்தபடி வந்தவள், படுக்கையிலிருந்த அருளானந்தனின் சாரத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.
அவளது உடல் முழுவதும் கோப்பி தந்த உஷ்ணத்தை விட, அவனது சாரம் அவளது பார்வை பட்டதும் தந்த உஷ்ணமே அதிகமாக இருந்தது. ஓடிச் சென்று அவனது சாரத்தை எடுத்து தனது உடலோடு அணைத்துக் கொண்டாள். அதில் அவள் கண்ட சுகத்துக்கோ அளவில்லை.
ஆம், பல நாட்கள் அருளானந்தனின் அணைப்பிற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தவள். அவன் இருக்கும் போதே அவனது உடைகளை எடுத்து இப்படி அணைத்து தனது ஏக்கங்களை நிறைவு செய்து, மகிழ முடியாமலிருந்தது.
இப்போதுதான் அவனில்லையே,
அவனது சாரத்தோடு, அவன் போர்த்துப் படுத்திருந்த தடித்த குளிர்ப் போர்வையையும் எடுத்துக் கொண்டு, கூடத்துக் வந்து அருளானந்தனின் சாரம், அருளானந்தனின் போர்வை என அடுக்காகத் தனக்கு மேல்ப் போர்த்துக் கொண்டு தொலையிக்கியால் (Remotecontrol) தொலைக் காட்சியை இயக்கினாள் சொல்வி.
தொலைக் காட்சியில் சுவீடன் நாட்டுக் காலைநேர அரட்டை இன்னமும் நிறைவுறவில்லை. அதைப் பார்க்கும் மனோ நிலையில் சொல்வி இருக்கவில்லை.
அவளது கண்கள் அருளானந்தனின் ஒளி-ஒலிப்பதிவு நாடா பெட்டிகள் அடுக்கி வைத்திருந்த அந்த அடுக்குத் தட்டில் (Shelf) ஓடியது. சொல்விக்குத் தமிழ்த் திரைப் படங்கள் பார்க்க விருப்பம். ஆனால் அன்று அதையும் சொல்வி விரும்பவில்லை.
அங்கே, 'Tamil film songs' என அருளானந்தன் எழுதி வைத்திருந்த நாடா அவளது கண் பார்வையின் ஓட்டத்தை நிறுத்தியது.
உடனேயே எழுந்து சென்று அதை எடுத்து ஒலி-ஒளிப் பதிவு நாடா இயக்கியில் (Video Cassette Recoder - VCR-) திணித்துவிட்டு, ஒரு வகை உற்சாகத்துடன் சோபாவில் (Sofa) படுத்துக் கொண்டு அருளானந்தனின் சாரத்தை எடுத்து ஒரு முறை முகர்ந்து தனக்கு மேல்ப் போர்த்தி குளிர்போர்வையைப் போர்த்தும்போது,
“Oh... my sweet sweet Asian Hercules... Your smell kills me... When will you come back and crush me... Oh... my dearest Arul” (ஓ... என்ர இனிய... இனிய... ஆசிய ஹேக்குலீஸ்... உன்ர வாசம் என்னைக் கொல்லுது... எப்ப நீ திரும்பி வந்து என்னை அணைச்சுக் கசக்குவாய்... ஓ... என்ர அன்பு... அருள்...) எனச் சொல்லிக் கொண்டே, VCR ஐ இயக்கினாள்...
அதில் வசந்தமாளிகை என்ற படத்தில் ‘மயக்கமென்ன...’ என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடத்தொடங்கியது.
அந்தப் பாடலை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் சொல்வி...
அந்தப் பாடலில் வாணிஸ்ரீ அணிந்திருந்த சேலையைப் போல தானும் அணிய வேண்டும். அந்தப் பாடலில் சிவாஜி கணேசனைப் போல அருளானந்தனை உடை அணிய வைத்து, இந்த ஊர் முழுவதும் அவனோடு சுற்ற வேண்டும்... இந்த நாடு முழுவதும் சுற்ற வேண்டும்... என சிந்தனை ஓடியது சொல்விக்கு.
‘இதென்ன விபரீத ஆசை’ என நினைத்தவள் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.
சில நிமிடங்கள் பாடலைப் பார்த்தபடியே இருந்த சொல்வி...
“ஏன் நாமிருவரும் அப்படி உடையணிந்து கொண்டு ஊர் சுற்றினாலென்ன யார் வந்து தடை சொல்லக்கூடும்...?” என சத்தமாகவே கேட்டுக்கொண்டாள் சொல்வி.
அப்படி நினைக்கும்போதே, உடலெல்லாம் ஒரு உன்னதமான உணர்வலை பரவுவதை உணர்ந்தாள்.
உடனேயே அந்தத் தடித்த போர்வைக்குக் கீழே இருந்த அருளானந்தனின் சாரத்தை எடுத்து நுகர்ந்து, ஒரு ஆழமான பெருமூச்செறிந்தாள் சொல்வி.
அந்த ஒளி-ஒலிப்பதிவு நாடாவில் இருந்த அத்தனை காதல்க் காட்சிகளிலும் வந்த இந்தியத் தமிழ் நடிகைகள் போல தானும் சேலை கட்டி உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும் என ஆசைப்பட்டாள்.
அந்த ஒளி-ஒலிப் பதிவு நாடாவின் நேரம் முடிவடைவதற்குள்ளேயே சொல்வியை நித்திரை தழுவிக்கொண்டது.
இனிய கனவுகளோடு உறங்கிக் கொண்டிருந்த சொல்வியை நண்பகல் பதினொரு மணியளவில், தொலைபேசி எழுப்பியது.
அருளானந்தன்தான் தொலைபேசி எடுப்பான், என ஆவலோடு தொலைபேசியை எடுத்து,
“Haiii Sweeetiii... What's up...” என்றாள் சொல்வி, கொஞ்சும் குரலில்.
“Hello, could I speak to mr. Arul please...(ஹெலோ... நான் அருளோட கதைக்கலாமா... )?” என்றது ஒரு இளம்பெண் மறுமுனையில்...
(தொடரும்...)

Tuesday, 26 May 2015
படிக்காத மனைவி - பாகம் 5 'ஹலோ அங்கிள்'
இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.
அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).
நோர்வேஜிய பெண்ணகளுக்கு அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன இல்லை எனப் பலர் நினைக்கிறார்கள். அது முற்றிலும் தவறு...
அதுவும் முதல்ப் பாகங்களில் விரிகிறது.
'ஹலோ அங்கிள்'...
அருளானந்தனும் சொல்வியும் ஒரு படுக்கையறை (Bed room), ஒரு வதிவறை (Living room), ஒரு அடுக்களை (Kitchen), ஒரு குளியல்க் கூடத்துடன் கழிகலன் கொண்ட குளியலறை (Bath & Toilet) கொண்ட லின்டாவின் தந்தையின் தொடர் மாடி வீட்டிற்கு (Apartment) குடிபுகுந்து, ஏறத்தாழ ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தன.
அவர்களிருவரும் வாழ்க்கையின் மிக மகிழ்ச்சியான காலத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தனர்.
கலாசாலை, வீடு, கலவி, சின்னச் சின்னச் சீண்டல், சின்னச் சின்ன சிலுமிசம், நண்பர்களுடன் கும்மாளம்,
நோர்வேயில் அருளானந்தனின் வருங்கல மாமனார் மாமியார் மைத்துனனின் அபரமிதமான உபசரிப்பு, இத்யாதி, இத்யாதி என இந்த ஒன்றரை வருட காலமும் அவர்களிருவரும் எந்த வித ஒரு சிக்கலுமில்லாமல் சிந்தனையுமில்லாமல் கழிந்தது.
குழந்தைகளைப்போல மகிழ்ச்சியாக, துன்பம் என்றால் என்ன... வாழ்க்கையில்ச் சிக்கலென்றால் என்ன... வெளி உலகில் என்ன நிகழ்கிறது, அதனால் எவ்வாறான சிக்கல்கள் தோன்றும்... அவற்றை எவ்வாறு சமாளிப்பது... என்ற எந்தவித சிந்தனையுமில்லாமல் அருளானந்தனும் சொல்வியும் இருந்தார்கள்.
அவர்களது கேள்விகளும் பதில்களும், யோசித்து முடிவெடுப்பது எல்லாமுமே...
இன்றைய உணவு வெளியேயா அல்லது சமையலா... ஐரோப்பிய உணவா இந்திய இலங்கை உணவா... சனி ஞாயிறுகளில் என்ன நேரம் எழுந்திருக்க வேண்டும்... சிநேகித சிநேகிதியர் யார் வருவார்கள்... யாரை அழைக்கலாம்... எங்கே சென்று வார இறுதியைக் கழிக்கலாம்... என்ன படம் பார்க்கலாம்... பார்த்த படத்தில் கதை, கதாபாத்திரங்களைப் பற்றி விவாதம்...
இறுதியாக இன்று எந்த நிலையில் கலவி அல்லது மறுநாள் அதை வைத்துக் கொள்வோமா...
இவைதான் அவர்களுடைய சிந்தனையும் யோசனையும் பதிலும் முடிவுகளும்.
எது எப்படி இருந்தாலும், சொல்வியிடம் ஒரு சிறிய மனத்தாங்கல் இருக்கத்தான் செய்தது. அது, ஒரு நாளுமே அருளானந்தன் சொல்வியை அவனது அப்பா அம்மா, தம்பி தங்கையுடன் தொலைபேசியில்க் கதைக்க அனுமதிப்பதில்லை.
அது ஏன் என அவளுக்குத் தெரியும்... அதுதான் அருளானந்தன் இன்னமும் அவர்களது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லவில்லை என்பது.
ஆனால் அவளைக் குடைந்தெடுத்த கேள்வி என்ன என்றால், ஏன் அருளானந்தன தங்கள் காதலை இன்னமும் அவனது அப்பா-அம்மாவுக்குச் சொல்ல விரும்புகிறானில்லை என்பதும்,
எப்போது, எப்படி அவர்களது உறவை அருளானந்தனது பெற்றோருக்குச் சொல்வது... எப்போது யாழ்ப்பாணம் செல்வது... தனது வருங்கால மாமனார் மாமியாரை, மைத்துனன் மைத்துனியை எப்போது பார்ப்பாது... அவர்களெல்லோரும் தன்னோடு எப்படிப் பழகுவார்கள்... என்பதெல்லாம் அவளது விடை கிடைக்காத கேள்விகளாய் மனதை உறுத்தும்.
ஓரளவு தமிழ் கதைக்கத் தெரிந்திருப்பதாலும் எதையும் தாங்கிக் கொள்ளலாம் என்ற மனத் தைரியம் இருப்பதாலும் யாழ்ப்பாணத்தில் அவர்களோடு இருக்கும் காலத்தில் அவர்கள் மனம் கோணாத வகையில் நடந்து கொள்ளாலாம் என தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள். என்றுமே சொல்வி, இவை பற்றி அருளானந்தனிடம் கதைத்ததில்லை.

ஒருநாள், சொல்வி தனியே வீட்டிலிருந்தபொழுது, தொலைபேசி இனிய நாதத்துடன் ஒலித்தது.
அருளானந்தனும் சொல்வியும் வீட்டிலும் கலாசாலையிலும் இருந்தால், அநேகமாக தொலைபேசியில் தங்களது படிப்பு சம்பந்தமாகக் கதைத்து ஆய்வுகளை எழுதுவார்கள்.
அது மட்டுமல்ல, அவர்களிருவரும் தொலைபேசியிலும் காதலிப்பார்கள். நேரம் போவது தெரியாமல் தொலைபேசியிலேயே கொஞ்சிக் கொண்டிருப்பார்கள். பத்து நிமிட நேரத்தில் வீடு செல்லாம், ஆனால் பல மணிநேரம் தொலைபேசியில் கொஞ்சி விளையாடுவார்கள்.

அதனால், அந்த நேரத்தில் அருளனந்தன்தான் கலாசாலையிலிருந்து அழைக்கிறான் என்ற திடமான நம்பிக்கையில்
"Haai Sweetie... what's up..." என கொஞ்சும் குரலில் கேட்டாள் சொல்வி.
"ஹலோ... யாரிது..." என்றது ஒரு பெண் குரல் மறுமுனையிலிருந்து.
எண்ணற்ற தடவைகள் அருளானந்தனின் நண்பர்கள் தொலைபேசியில் சொல்வியுடன் தமிழில் கதைத்திருக்கிறார்கள். சொல்வி தனக்குத் தமிழ் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ளாது, அருளானந்தனிடம் தொலை பேசியின் ஒலி வாங்கியைத் (Receiver) தந்துவிடுவாள். அருளானந்தன் இல்லை என்றால் ஆங்கிலத்திலோ, நோர்வேஜிய மொழியிலோ அவர்களுடன் கதைப்பாள்.
தமிழ் விளங்கிக் கொண்டது போலவும் காட்டிக் கொள்வதில்லை. அவளது எண்ணமெல்லாம் சரளமாகத் தமிழில்க் கதைத்து அருளானந்தனை ஆச்சரியப்பட வைக்க வேண்டுமென்பதே.
அதுவும் அருளானந்தனின் தாய், தந்தை, தம்பி, தங்கை இவர்களுடன் அவள் தமிழில்க் கதைப்பதை அருளானந்தன் பார்த்து ஆச்சரியப்பட வேண்டும் என ஆவலுடன் காத்திருந்தாள். அந்த நாள் வெகு தூரத்திலும் இல்லை என்பதால், எவருக்கும் அவள் தனது தமிழறிவை வெளிக்காட்டாது இருந்தாள்.
ஆனால் எந்த ஒரு தமிழ்ப் பெண் மாணவியும் சொல்வியுடன் தமிழில்க் கதைத்துச் சீண்டுவதில்லை.
அதைவிட, அழைத்த பெண் சிறிது வயதில் முதிர்ந்தவாராகவும் தொலைபேசி அழைப்பு தூர இடத்திலிருந்து வருகிறதென்பதையும் சொல்வி புரிந்து கொண்டாள்.
ஆக, இந்தத் தமிழ்ப் பெண்ணுடன் தனக்குத் தெரிந்த தமிழில் கதைத்தாள் சொல்வி.
"ஹலோ... அருள்... அவர்... வீட்டில இல்ல... நீங்க... யாரு..." என மிகவும் ஆறுதலாகவும் சொல்லுச் சொல்லாகவும் கதைத்தாள்.
"அருளானந்தன்ர வீடில்லயா இது... பிழையான நம்பரா..." என்றது அந்தப் பெண் குரல்.
"இது சரியான நம்பர்தான்... அவரும்.... " என சொல்வி அடுத்த சொல்லுக்காக யோசித்த வேளை...
"நீ ஊர்ல எவடம்... உன்ர தமிழ் ஒரு மாதிரியிருக்கு... " என்றது அந்தப் பெண் குரல்.
"நான் நோர்வே..." என்றாள் சொல்வி.
"நீ நோர்வே நாட்டுப் பொண்ணா... தமிழ் கதைக்கிறியே..." என ஆச்சரியமாகக் கேட்டது அந்தப் பெண்குரல்.
"கொஞ்சம்... கொஞ்சம்... தெரியும்... கதைப்பன்..." என்றாள் சொல்வி அளவில்லாத சந்தோஷத்துடன் கூச்சத்துடனும்.
"Hello, this is Arul's father... (ஹலோ, இது அருளின்ர அப்பா...)" என அருளானந்தனின் தந்தை கதைத்தார்.
"Hello uncle...(ஹலோ... மாமா...)" என மட்டற்ற மகிழ்ச்சியுடன் அன்பாக அழைத்தவள் உடனேயே
"Was that Arul's mother...? (அது அருளின் அம்மாவா...)" எனக் கேட்டாள் சொல்வி, இப்போதும் அளவில்லாத மகிழ்ச்சியுடனும் ஆச்சர்யத்துடனும்.
"Yes... that was his mother...(ஓம்... அது அவனுடைய அம்மா...)" என அருளானந்தனின் தந்தை முடிப்பதற்குள்
"Oh... My... God... I can not beilive I really talk to you...(அடக் கடவுளே... என்னால நம்ப முடியாமலிருக்கு உண்மையிலயே நான் உங்களோட கதைக்கிறன் எண்டத...)" என சொல்வி சொன்னபோது.
"May I know who you are...? and What you are doing in Arul's Apartment...? (நீ யாரெண்டு தெரிஞ்சு கொள்ளலாமா... நீ அருளின்ர வீட்டில என்ன செய்யுறாய்...)"என அருளானந்தனின் தந்தை கேட்டார்.
அப்போது, சொல்வி ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொண்டாள்... அது அருளானந்தன் தங்களது காதலை அவனது பெற்றோருக்கு இன்னமும் சொல்லவில்லை என்பது.
சொல்விக்கு இதைப்பற்றி அந்த இந்தியத் தமிழ்ப் பெண், தமிழ் சொல்லித் தரும்போது, கதைத்திருந்தாள். 'பொதுவாக, காதல் வசப்பட்ட ஆணோ பெண்ணோ தமது பெற்றோரிடம் அதைச் சொல்ல பயப்படுவார்கள். எதற்கும் நீ அருளானந்தனிடம் கேட்டுத் தெரிந்துகொள். எக்குத் தப்பாக தொலைபேசியில் மாட்டிக் கொள்ளாதே' என எச்சரித்திருந்தாள்.
அருளானந்தனிடம் சொல்வி கேட்டபோதெல்லாம், 'நான் சொல்கிறேன்... நான் நிட்சமாகக் கதைக்கிறேன்' என்றானே தவிர அவன் தனது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லவில்லை என்பதை அவனுடைய தந்தையின் கேள்வியிலிருந்து அறிந்து கொண்டாள்.
இந்த யோசனையெல்லாம் அசுர வேகத்தில் சொல்வியின் தலைக்குள் சுழன்று சரியான ஒரு யுக்தியை, ஒரு யோசனையைக் கொண்டு வந்தது.
"No... Uncle... I am in my room; but we share this telephone to reduce the cost... (இல்ல.. மாமா... நான் என்ர அறையில இருக்கிறன்... நாங்க ரெண்டு பேரும் இந்தத் தொலைபேசியை பகிர்ந்து கொள்றம்... செலவைக் குறைக்கிறதுக்காக...)" என்றாள் சொல்வி ஒரு பதட்டத்தையும் வெளிக்காட்டாமல்.
"Oh... that's very good idea and how... is it possible...? (ஓ... அது நல்லதொரு யோசனை... ஆனா... அதெப்பிடி... அது செய்யலாமோ...)" எனக் கேட்டார் அருளானந்தனின் தந்தை.
"Oh... Yes... It is very simple uncle... Just assume we put another one telephone in a bed room or any where else... at home... Just like that... Arul's friend who made the connection...(ஒமோம்... அது வெகு சுலபம்... இப்ப... ஒரு வீட்டிலயே ஒரு தொலைபேசியை படுக்யையறையிலயோ... அல்லது வேறேதாவது இடத்திலயோ பூட்டூற மாதிரி... அருளின்ர நண்பர் ஒருவர்தான் அப்பிடி இணைப்புக் கொடுத்தவர்..." என ஒரு பொய் சொன்னாள்.
"Oh... Yes... Yes... that's wonderful...(ஓமோம்... அது நல்லது...)" என அருளானந்தனின் தந்தை சொன்னபோது, சொல்வி மார்பில்க் கையை வைத்து, 'Oh... My... Jesus...(ஓ... என்ர யேசுவே...) தப்பிச்சேன்... Thank You...' என மனதுக்குள் கடவுளுக்கு நன்றி செலுத்தினாள்.
அவள் தங்களது காதலை அருளானந்தனே அவனது பெற்றோருக்குச் சொல்ல வேண்டும் என நினைத்தாள். அதுவே முறையானதும் என நினைத்தாள். அருளானந்தன் அவர்களது காதலைச் சொல்லாமலிருக்க, தான் அதைச் சொல்லி அதனால் அருளானந்தனின் பெற்றோர் அருளானந்தன் மீது கோபங்கொள்ளக் கூடும் எனவும் யோசித்தே அப்படி ஒரு பொய்யைச் சொன்னாள் சொல்வி.
"I didn't get your name...(உன்ர பேரைச் சொல்லேல்ல...)" என்றார் அருளானந்தனின் தந்தை.
"Oh... Sorry Uncle... My name is Selvi... uncle...(ஓ... மன்னியுங்கள் மாமா... என்ர பேர் செல்வி...)" என்றாள் சொல்வி பணிவுடன்.
"Oh... Are you Tamil...? (ஓ... நீ தமிழா...?)" என்று ஆச்சரியத்துடன் கேட்டார் அருளானந்தனின் தந்தை.
"Oh... No uncle... I am a Norwegian, but my name sounds like Tamil name... Arul also told me... (ஓ... இல்லை மாமா... நான் ஒரு நோர்வே நாட்டவள்... ஆனா என்ர பேர் தமிழ்ப் பேரைப்போல இருக்கு... அருளும் அதைச் சொன்னவர்...)" என்றாள் சொல்வி.
"Hello, Selvi... would please ask Arul to call us... We are now staying with Arul's uncle in Madras...(ஹலோ, செல்வி... தயவு செய்து...அருளை எங்களுக் தொலைபேசி எடுக்கச் சொல்கிறாயா... நாங்கள் இப்ப அருளின்ர மாமாவோட சென்னையில இருக்கிறம்...)" எனக் கேட்டுக் கொண்டார் அருளானந்தனின் தந்தை.
"Ok... Uncle... I'll tell him..."எனச் சொன்னாள் சொல்வி.
"Thank You... Selvi... It is very nice to talk with you... You are a nice girl... Take care...(நன்றி செல்வி... உன்னோட கதைச்சது சந்தோஷம்... நீ ஒரு நல்ல பிள்ளை... பாதுகாப்பாய் இரு...)" என மிகுந்த அன்புடன் சொன்னார் அருளானந்தனின் தந்தை.
சொல்விக்கு சந்தோஷத்தால் கை கால்கள் நடுங்கியது, உதடுகள் துடித்தன, நாணத்தால் முகம் சிவந்தது. சொல்வி தொடர்ந்து நிற்க இயலாமல் கதிரையில் சாய்ந்தாள்.
"Thank You uncle... And I'll take care of Arul..."என்றவள் நாக்கைக் கடித்துக் கொண்டாள். ஆனால் மறுமுனையில் அது தெளிவாகக் கேட்கவில்லை...
"Bye... Bye..."என்றார் அருளானந்தனின் தந்தை.
"Bye..." என நடுங்கும் கைகளால் தொலைபேசியின் ஒலி வாங்கியை தொலைபேசியில் வைத்தவள், சோர்ந்துபோய் அப்படியே கதிரையில் அமர்ந்திருந்தாள்.
சொல்விக்கு ஒரு பக்கம் சந்தோஷம், கிளுகிளுப்பு அவள் உடலை ஆக்கிரமித்தாலும், மறு பக்கம் மூளையை குடைந்தெடுத்தது பலமான யோசனை.
அந்த யோசனையெல்லாம் அருளானந்தன் ஏன் இன்னமும் தங்களது காதலை அவனது பெற்றோருக்குச் சொல்லத் தயங்குகிறான் என்பது. சிந்தனை வசப்பட்டவளாக இருந்தவள், அப்படியே உறங்கிவிட்டாள்.
அருளானந்தன் வீடு வந்தபோது, சொல்வி கதிரையிலேயே ஆழ்ந்த நித்திரையில் இருந்தாள்.
புத்தகப்பையை சத்தமில்லாது வைத்துவிட்டு, சொல்வியினருகில் வந்து நின்று அவள் நித்திரை செய்யும் அழகை சில நிமிடங்கள் பார்த்து இரசித்துக் கொண்டிருந்தான்.
ஒவ்வொரு முறையும் சொல்வி மூச்சு இழுத்து விடுகையில் அவளது மார்பு ஏறி இறங்குவதை பார்த்து இரசித்து,
"My... Sweet... Angel...(எனது... இனிய தேவதை...)" எனச் சொல்லிக் கொண்டே சொல்வியின் நெற்றியில் முத்தமிட்டான் அருளானந்தன்.
"அ... என்ன..." எனக் கேட்டுக் கொண்டே கண் விழித்து அருளானந்தனைப் பார்த்தாள் சொல்வி.
"எனது இனிய தேவதை... எண்டு சொன்னனான்..." என்ற அருளானந்தன், அந்த மூவர் அமரக்கூடிய கதிரையில் (Sofa) சொல்விக்கு மிக அருகில் அமர்ந்து சொல்வியை இறுக அணைத்து அவளது உதடுகளில் கனிவாக முத்தமிட்டான்.
அவனது கைகளுக்குள் சொல்வி இதமாக அவனது மார்பில் முகம் புதைத்து சிறிது நேரம் சுகம் கண்டாள்.
"அது சரி... நீ அப்பிடி என்ன செய்து... இப்பிடிக் களைச்சுப் போய் சோபாவில நித்திரை கொள்றாய்...?" என அருளானந்தன் கேட்டதும் சொல்வி அவனது கைகளுக்குள்ளேயே அணைந்து மார்பிலிருந்து விலகாமல் தலையை நிமிர்த்தி, அருளானந்தனைப் பார்த்தாள்.
பின்னர்
"எனக்கு என்னெண்டு தெரியேல்ல... மேசையில இருந்து திசீஸ் (thesis ஆய்வறிக்கை) எழுதிக் கொண்டிருந்தனான் எப்பிடி இதில வந்து நித்திரை கொண்டனெண்டு தெரியேல்ல..." எனக் குழம்பினாள்.
"நீ எதையோ கடுமையா யோசிச்சிருக்கிறாய்... அதால மூளை களைச்சுப் போயிட்டுது... கொஞ்ச நேரம் இதில இருப்பம் எண்டு வந்திருப்பாய்... அப்பிடியே நித்திரையாயிட்டாய்..." என விளக்கம் கொடுத்தான் அருளானந்தன்.
அதைக் கேட்டபோது,
திடீரென அவனது இரு கைகளையும் விலக்கிக் கொண்டு எழுந்திருந்த சொல்வி, அருளானந்தனையே பார்த்தாள். அந்தப் பார்வையில் கலக்கம் நிறைந்திருந்தது.
"ஹேய்... என்ன அப்பிடிப் பாக்கிறாய்..." எனக் குழப்பத்தோடு கேட்டான் அருளானந்தன்.
"நீ எப்ப... எங்களை அல்லது என்னைப் பற்றி உன்ர அம்மா-அப்பாவிட்ட சொல்லப் போறாய்..." என ஏக்கத்துடன் கேட்டாள் சொல்வி.
"சொல்றன்... இப்ப இலங்கேல பிரச்சனையாம் இப்ப போய் எங்களப் பற்றிக் கதைச்சா அவையள் என்ன சொல்லுவினம் எண்டு தெரியாது. ஆறுதலா நேரம் வரேக்க சொல்றன்... இப்ப எதுக்கு அதெல்லாம்... நீ அளவுக்கு அதிகமா யோசிக்கிறாய்..." என ஆறுதல் சொல்லியபடியே சொல்வியை அணைத்தான்.
சொல்வியும் அவனது மார்பில் சாய்ந்தபடி,
"நான் இண்டைக்கு உன்ர அம்மா அப்பாவோட கதைச்சனான்..." எனச் சொல்லியபடியே அவனது சட்டைக்குள் (Shirt) விரல்ளை சொருகி அருளானந்தனின் மார்பில் இருந்த மயிர்களைக் கோதி விட்டுக்கொண்டிருந்தாள்.
அருளானந்தன் திகைத்துப் போய், சொல்வியை தூக்கி நேராக இருத்தி அவளது விழிகளுக்குள் பார்த்து,
"என்ர அம்மா அப்பாவோட கதைச்சனியா...? எப்ப... என்ன சொன்னனி... அவை என்ன சொன்னவை..." என பதட்டப்பட்டான் அருளானந்தன்.
"Relax... (ஆறுதலாயிரு...) நானொண்டும் உன்ர ரகசியத்தை அவயளட்டச் சொல்லேல்ல... எனக்கு இதை அந்த இந்தியத் தமிழ்ப் பெண் சொல்லி எச்சரித்திருக்கிறாள்... " என சொன்னவளின் கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றாகிக் கன்னத்தில் வழிந்தது.
"ஹேய்... ஏனிப்ப அழுறாய்... நீ என்ன கதைச்சனி எண்டுதானே கேட்டனான்..." என சொல்வியை அணைத்தான்.
"ஆசையா... ரெண்டு வார்த்தை உன்ர அம்மாவோட கதைக்கேலாமப்போச்சு... ஆசையா... உன்ர அப்பாவை 'அங்கிள்' எண்டன்... அவர்... அவர்... 'யார் நீ...' எண்டு கேட்டுட்டார்..." என விம்மலினூடே சொன்னாள் சொல்வி.
"ஹேய்... அழாத... அம்மா அவ்வளவுக்கு இங்கிலீஸ் கதைக்கமாட்டா... அப்பாவுக்குத் தெரியாததால நீ யார்... எண்டு கேட்டிருப்பார். இப்ப... உதாரணத்துக்கு நீ நோர்வேயில இருக்கிறாய் இங்க நீ கோல் (Call) எடுக்கேக்க... ஒரு பொம்பிள கதைச்சா நீ என்ன கேட்பாய்..." எனச் சமாதனம் சொல்லும் வகையில் அருளானந்தன் கேட்டபோது,
அவனது மார்பை விட்டெழுந்து அருளானந்தனின் முகத்தைப் பார்த்து,
"அடுத்த ப்ளைட்டில (flight) இங்க வந்து நிப்பன்..." எனச் சொல்லி அவனது மார்பில் 'தும் தும் தும்' எனக் குத்தினாள் சொல்வி.
சொல்வியை அப்படியே அணைத்து அவளது உதடுகளில் முத்தங் கொடுத்தான் அருளானந்தன்.
"ஹேய்... உன்ர அம்மா அப்பா, தம்பி தங்கை எல்லாரும் இந்தியாவுக்கு வந்திருக்கினமாம். உன்ர அங்கிள் வீடடிலதான் தங்கியிருக்கினமாம்... உன்னை கோல் பண்ணச் சொல்லச் சொன்னார் உன்ர அப்பா... என்ர மாமா..." என வெட்கத்துடன் சொல்லி அவனது மார்பில் முகம் புதைத்தாள் சொல்வி...
"ஐயோ வெக்கத்தைப் பார்... முகமெல்லாம் வெக்கத்தில சிவந்து போச்சு..." என சொல்வியை அணைத்து அவளது உச்சியல் முத்தமிட்ட அருளானந்தன், தொலைபேசியைின் ஒலிவாங்கியை எடுத்து, எண்களை அமுக்கினான்.
சொல்வி அவனது மடியில் படுத்திருந்தபடியே தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கி சத்தமில்லாது பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஒரு பத்து, பதினைந்து நிமிடம் அருளானந்தன் தொலைபேசியில் அவனது அம்மா அப்பாவுடன் கதைத்து முடித்தவன் தொலைபேசியை வைத்துவிட்டு, சொல்வியின் பொன்னிறக் கேசங்களைக் கோதிவிட்டுக் கொண்டிருந்தான்.
சொல்விக்கு அருளானந்தனின் தமிழ் ஓரளவுக்கு விளங்கினாலும் முழுவதையும் விளங்கிக் கொள்ள முடியவில்லை.
சொல்வி நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்தாள். அவளது பார்வையில் 'நாம் யாழ்ப்பாணம் போக முடியாதா...' என்ற கேள்வி நிறைந்திருதது. அருளானந்தன் சொல்வியின் பார்வையை சந்திக்கத் தைரியமில்லாது, சுவரை வெறித்துப் பார்த்த வண்ணம் அவனது மடியில்ப் படுத்திருந்த சொல்வியின் தலைமுடியைக் கோதிக்கொண்டிருந்தான்.
தொடரும்...

Subscribe to:
Comments (Atom)