Saturday 29 August 2015

படிக்காத மனைவி - பாகம் 6 'தனிமை'

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).

மனதுக்குப் பிடித்தவரை சில மணிநேரம் பார்க்காமல் இருந்தாலே அது யுகங்களாகத் தோன்றும். இது, பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் பொருந்தும்... 

தனிமை


அன்றைய தொலைபேசி அழைப்பின் பின், அருளானந்தன் அமைதியை இழந்து தவித்தான். எதையும் சொல்வி கேட்டால்; எரிந்து விழுந்தான். சொல்வியும் அவனது நிலையால் அவளும் குழம்பித் தவித்தாள்.

அருளானந்தனுக்கு எந்த வகையில் ஆறுதல் கூறலாம்... அல்லது எந்த வகையில் அவனுக்கு உதவலாம் என யோசித்துக் குழம்பிப் போயிருந்தாள் சொல்வி. எதையும் அருளானந்தனைக் கேட்டுத் தெரிந்து கொள்ள இயலாமல்த் தவித்தாள்.

காரணமில்லாமல் சிடுசிடுத்தான் அருளானந்தன். முன்னரெல்லாம், சொல்வியைச் சாப்பிட விடாமல் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான். அதற்காகவே அவன் வரும் வரை சாப்பிடாமல் காத்திருப்பாள் சொல்வி.

கணவர் உணவு உண்ணும் வரை காத்திருந்து, கணவர் உண்ட இலையில் உணவு உண்பது தமிழ்ப் பெண்கள் வழமை... - இன்று அதெல்லாம் அருகி வருகிறது. -

அதாவது, தமிழ்ப் பெண்கள் தமது கணவர் எவற்றையெல்லாம் இலையில் மீதம் வைத்திருக்கிறார் எனப் பார்ப்பதற்காகவே அவர்கள் கணவர் உணவு உண்டு எழுந்த பின் அதே இலையில் உணவு உண்பது வழக்கமாயிற்று.

இன்னும், ஒருவர் உணவு உண்ணும்போது, அவருக்கு அருகில் இருந்து இன்னொருவர் உணவு பரிமாற வேண்டும். இது கணவன் உண்ணும்போது மனைவியும், மனைவி உணவு உண்ணும் போது கணவனும் உணவு பரிமாறுவது வழமை.
நாம் உணவு உண்ணும்போது, விரல்களால் உண்போம். ஏதாவது மேலதிகமாகத் தேவையெனில் அதை அருகில் இருந்து உணவு பரிமாறுபவர் எடுத்துத் தருவார். இதனால் உணவு உண்ட கையினால் அகப்பை முதலியவற்றை பிடிப்பதும் தவிர்க்கப் படுகிறது.
இவற்றை விட,
கணவன் உண்ட மீதம் மனைவி உண்பதும், மனைவி உண்ட மீதம் கணவன் உண்பதும் தாம்பத்திய நெருக்கத்தை இன்னும் மிகைப்படுத்தும். ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தும். ஒரு கிளுகிளுப்பைத் தரும்.

அதெல்லாம் சொல்விக்குத் தெரியாது.

அருளானந்தன் வரும்வரை சொல்வி காத்திருப்பது, அவனது கலகலப்பான பேச்சிலும் இடைவிடாத நகைச்சுவையிலும் அவள் தன்னை மறந்து சிரித்துச் சிரித்து சாப்பிட வேண்டும். அதுதான் அவளது விருப்பம்...

ஆனால்...
“என்னை சாப்பிட விடு அருள் பசிக்குது...” எனக் கெஞ்சுவாள்.
“சரி... சரி... நீ சாப்பிடு...” என சில நிமிடங்கள்தான் பார்த்துக் கொண்டிருப்பான்; பின்னர் ஆரம்பித்துவிடுவான்.
அவளும் அவன் சிரிக்கச் சிரிக்க கதைத்துக் கொண்டிருக்கும்போதே சாப்பிட விரும்புவாள். மனமும் வயிறும் நிறைந்தது போல இருக்கும்.

பல மேலை நாட்டுப் பெண்கள், கணவர் அல்லது காதலர் வீடு வருமுன்னரே தமக்குப் பசித்தால், அவர்கள் உண்டு விட்டு உறங்கியும் விடுவார்கள்,

ஆனால்

சொல்வி அப்படிப் பட்டவளில்லை. சொல்வி உணவு உண்ணும்போது, யாராவது ஒருவரோடு சேர்ந்திருந்துதான் உணவு உண்பாள். நோர்வேயில் இருந்தபோது, ஹன்னா இவளுக்குத் துணையாக இருந்தாள். சுவீடன் வந்த பின்னர் எப்போதுமே அருளானந்தனுடன்தான் உணவு உண்பாள்.
அருளானந்தன், அவனது நண்பர்களோடு அரட்டையில் இருந்தால், அவளும் உணவு உண்ணாமலே உறங்கிவிடுவாள்.

“நான் வாறதுக்கு முன்னமே நீ சாப்பிடலாமே... ஏன் சாப்பிடாமல இருக்கிறனீ...” எனக் கேட்டான் ஒரு நாள் அருளானந்தன்.

“அது முடியாது... நீயும் இருந்து என்னோட சாப்பிட வேணும்... கதைக்க வேணும்... சிரிக்க வேணும் நானும் சாப்பிட வேணும்... அதுதான் எனக்குப் பிடிக்கும்.” என்றாள்.

“தமிழில இதுக்கு ஒரு பழமொழி சொல்லுவாங்க... ‘கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை’ எண்டு” என்றான்.

பழமொழி சொன்னதோடு நிறுத்திவிடாமல் அதற்கு விளக்கமும் சொன்னான் அருளானந்தன்.

“எனக்கு உன்னோட இருந்து சிரிச்சுக் கதைச்சு சாப்பிட வேணுமெண்டதுதான் ஆசை. அதுக்கு நீ இப்பிடி ஒரு அருத்தம் சொல்லுவாயெண்டால் சொல்லு... பறவாயில்லை” என்றாள் சொல்வி

“Heeeiii, நான் பழமொழிதானே சொன்னனான்... அதுக்குப்போய் இப்பிடி குழம்புறியே...” என ஆறுதல் சொன்னான்.

ஆனால்,

அந்தத் தொலைபேசி வந்த அன்றிலிருந்து, அவனிடம் அந்த நகைச்சுவை, குறும்பு, சின்னச் சின்னச் சிலுமிசங்கள், சின்னச் சின்னச் சீண்டல்கள், சின்னச் சின்னச் சிணுங்கல்கள் எல்லாம் இல்லாமல்ப் போயிருந்தது.

இருவரும் ஏதோ அன்னியர் இருவர் எதிரும் புதிருமாக இருந்து உணவு உண்பது போல உணவு உட்கொள்வார்கள்.
தொலைக்காட்சி கூட இருவரும் கூட இருந்து பார்ப்பதில்லை.

அன்று ஒரு புதன்கிழமை இருவரும் மறுநாள் காலை வழமை போல பல்கலைக் கழகம் செல்லவேண்டும், அதனால் சிறிது நேரத்துடனே அருளானந்தனும் சொல்வியும் படுக்கைக்குச் சென்றனர்.

படுக்கும் போது, எப்போதுமே; அருளானந்தன் எப்படிப் படுத்திருந்தாலும் - நிமிர்ந்து, சரிந்து, கவிழ்ந்து - சொல்வி அவனுக்கு மேல் ஒரு கையும் ஒரு காலும் போட்டபடிதான் படுத்துறங்குவாள்.
அனேகமாக, அருளானந்தன் நிமிர்ந்தே படுப்பவன். அவன் அப்படிப் படுத்திருந்தால், சொல்வி ஆசையாக அருளானந்தனது இடது கை புஜத்தில் தலை வைத்தபடி தனது இடது கையால் அருளானந்தனது மார்பை இறுக அணைத்தபடியும் இடது காலை அவனது கால்களுக்குக் குறுக்காக எறிந்தபடிதான் உறங்குவாள்.

ஆனால் அன்று அவள் அப்படிப் படுக்கவில்லை. தனது கரையில், அருளானந்தனைப் பார்க்கு முகமாக படுத்து கண்களை வலுக்கட்டாயமாக மூடிக் கொண்டு படுத்திருந்தாள்.
அந்த நிலையில் சொல்விக்கு நித்திரை வர மறுக்கும். நித்திரை வர மறுத்தது.

அருளானந்தன் என்றுமே ‘கும்’ என்ற இருட்டில் படுக்க மாட்டான். ஏதாவது சிறிய வெளிச்சம் படுக்கை அறையில் இருந்தே ஆக வேண்டும். அதனால், சொல்வியே இரண்டு வெளிர் நீல மின்சார விளக்குகளைப் பொருத்திருந்தாள். அவை கண்களை உறுத்தாது, ஆனால் ஒரு மென்மையான ஒளி பரப்பிய வண்ணமிருக்கும்.

அந்த வெளிச்சத்தில் சொல்வி, இடையிடையே கண் விழித்து, அருளானந்தனைப் பார்த்தாள். அவனோ ஆசையாக அவள் தலை வைக்கும் இடது கையை தனது தலைக்கு மேல் வைத்தபடி படுத்திருந்தான்.

இரவு நேரம் பத்து மணியிருக்கும், அருளானந்தனும் சொல்வியும் ஒருவரை ஒருவர் தொடமல்ப் படுத்திருந்த நேரம், தொலைபேசி ரீங்காரமாக ஒலித்தது.

அருளானந்தன் தமிழில்த் தொலைபேசியில்க் கதைத்தான். சொல்வி கேட்டுக் கொண்டே கண்களைத் திறக்காமல் படுத்திருந்தாள்.

“பொறு! அவள் படுத்திருக்கிறாள். நித்திரையெண்டா எழுப்ப மாட்டன். நித்திரையில்லாட்டி, கேட்டுட்டுச் சொல்றன்” என்ற அருளானந்தன் மெல்ல எட்டி சொல்வி போர்த்திருந்த அந்த தடித்த குளிர்காலப் போர்வையில்க் கை வைத்து, மிக மென்மையான குரலில்

“சொல்வி” என அழைத்தான்.

அருளானந்தன் தன்னைத் தொடும்வரை காத்திருந்த சொல்வி, கண்களைத் திறந்து அருளானந்தனைப் பார்த்தாள். அந்தப் பார்வையில் ஒரு சலனமும் இல்லாதிருந்தது.

“Heeii, ரகு, காரில நாளைக்கு காலமை ஒஸ்லோ போறானாம்... எங்கள் ரெண்டு பேரையும் வரட்டுமாம்...” என அருளானந்தன் சொல்லி முடிப்பதற்குள்,
“நீ தேவையெண்டா போயிட்டு வா... எனக்கு வர ஏலாது.” என்றாள் சொல்வி, இப்போதும் ஒரு சலனமுமில்லாது.

அப்போது, அருளானந்தன் அவளுக்கு அருகில் வந்து, அவளுக்கு மேலே வலது கையைத் தொலைபேசியோடு வைத்துக் கொண்டும் சொல்வியின் முகத்துக்கு மிக அருகில் தனது முகத்தை வைத்துக் கொண்டும்,
“ஹேய்... உனக்கு சுகமில்லையா... அப்பிடியெண்டா நானும் போகேல்ல...” என்றான் மிகுந்த ஏக்கத்துடன்.

“அப்பிடியெல்லாம் ஒண்டுமில்லை...” என்றவள், சைகையால் அருளானந்தன் வைத்திருந்த தொலை பேசியைக் காட்டினாள்.

“ஓ...” என்ற அருளானந்தன் சொல்வியை விட்டு உருண்டு வந்து, தொலைபேசியில்க் கதைத்தான்.

தொலைபேசியில்க் கதைத்து முடித்த பின், தன்னை முரட்டுத்தனமாக இழுத்து அணைத்து, முத்தம் தருவான். இந்த இரவு இனிமையான இரவாக விடியும் எனக் காத்திருந்தாள் சொல்வி.

ஆனால்,

அவள் எப்போது நித்திரைக்குப் போனாள் என்பது அவளுக்கே தெரியாது. காலையில் அருளானந்தன் அவளை எழுப்பிய போதுதான் கண் விழித்தாள்.

கையில் ஒரு குவளை கோப்பியுடன் சொல்வி அருகில் கட்டிலில் அமர்ந்திருந்தான் அருளானந்தன். அருளானந்தன் ஒஸ்லோ செல்வதற்கு ஆயத்தமான நிலையில் இருந்தான்.

“Heeiii, Good Morning...” என்றாள் சொல்வி அவளது மாறத புன்சிரிப்புடன்.
“Good Morning Sweetie...” என அருளானந்தனும் மலர்ந்த முகத்துடன் சொன்ன போது, சொல்விக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

“Are you ready for big journey? (உன்ர நெடுந்தூரப் பயணத்துக்கு தயாரா...)” எனக் குறும்பாகக் கேட்டாள் சொல்வி.

“ஹேய் உனக்குச் சுகமில்லையெண்டா... சொல்லு நானும் போகேல்ல...” என்றான் அருளானந்தன்.

“எனக்கொண்டுமில்லை... I'm fine... Why? (நான் சுகமாயிருக்கிறன்... ஏன்...) ” என்றாள் சொல்வி.

“இல்லை நீ இந்த ‘ட்ரிப்’(trip)க்கு வரமாட்டன் எண்றாய் அதாலதான் கேட்டன்.” என்றான் அருளானந்தான்.

“நானும் நீயும் தனிய ‘ட்ரிப்’புகள் போகேக்க இருக்கிற சந்தோஷம் இன்னொருத்தரோட போகேக்க இருக்காது... அதைவிட, நான் ஒஸ்லோவுக்குப் போனா, எங்கட வீட்டுக்குப் போகாம வரமாட்டன். அதுக்கு ரகு ஒத்துக் கொள்ள மாட்டான்.
ஏன் வீணா உன்ர ‘ப்ரெண்டுக்கு’ (friend)  தொல்லை கொடுப்பான் எண்டுதான் வரேல்ல எண்டனான்.” என்று சொல்லிக் கொண்டே சொல்வி படுத்திருந்த படியே அருளானந்தனின் கையைத் தடவிக் கொண்டிருந்தாள்.

“ம்...ம்... நீ சொல்றதும் சரிதான்” என அவள் சொன்னதை ஆமோதித்த அருளானந்தன்,

“ரெண்டு நாளும் என்ன செய்யப் போறாய்” எனக் கேட்டான்.

“கீழ் மாடியில, ஒரு ஆபிரிக்க நாட்டுக் காரன் இருக்கிறான். அவனோட போய்...” என சொல்வி முடிக்குமுன்பே

“Heeii..., that's good idea... Go and have fun... (ஹேய்..., அது நல்லதொரு யோசனை... போ... சந்தோஷமாயிரு...)” என்று சொல்வியைப் பார்த்து ஒரு கண்ணைச் சிமிட்டியபடி இரட்டை அர்த்தத்தில் சொன்னான் அருளானந்தன்.

அருளானந்தனும் இதே போல சொல்வியைச் சீண்டுவதுண்டு, அதனால் அவள் சொல்வதைக் கேட்டு அதிர்ந்து போகவில்லை. இன்னும் அவள் சொன்னதற்கு மேலாகச் சொன்னான்.

சொல்வி விரல்களை மடக்கிக் கொண்டு, கையினால் ஓங்கி ஒரு குத்துக் குத்தினாள், அருளானந்தனின் இடது புஜத்தில்.

“ஆ...உவ்... வலிக்குதடி” என்று தமிழில் கத்திக் கொண்டு அவள் அடித்த இடத்தை மறு கையால்த் தேய்த்து விட்டான்.

“வளி...குது... Oh... pain... that's good  (ஓ... வலி... அது நல்லது) எனச் சொன்ன சொல்வி தொடர்ந்து,

“அருள்... உன்னைத் தவிர நான், வேற யாரட்டையும் போவன் எண்டு நினைக்கிறியா...” என ஆதங்கத்தோடு கேட்டாள்.

“Heeeiii, don't be silly...” என சொல்வியின் முகத்தருகே குனிந்து,

“எனக்குத் தெரியும் நீ வீம்புக்காகக் கதைக்கிறாயெண்டு, அதுதான் நானும் அப்பிடிச் சொன்னன்” எனும் போதே, அழைப்பு மணி அடித்தது.

அப்படியே ஒரு சிறிய முத்தம் தருவான் என எதிர்பார்த்த சொல்வி ஏமாந்தாள்.
சொல்வியின் கண்கள் கலங்கிவிட்டதைக் கவனிக்காத அருளானந்தன், ஓடிச் சென்று வாசல்க் கதவருகில் இருந்த, பிரதான வாசல்க் கதவைத் திறக்கும் ஆளியோடிருந்த ஒலி வாங்கியை எடுத்து,

“ஹேய்...ரகு... உள்ள வாறியா... அல்லது நான் வரட்டுமா... ” எனக் கேட்டான்.
மடிக் கட்டிடத்தின் பிரதான வாசலில் நின்றிருந்த ரகு, மாடிக் குடியிருப்புகளின் எண்களோடிருந்த பலகையில் பொருத்திய ‘மைக்’ (microphone) அருகில் வந்து,

“நீ வாவென் பிறகேன் நான் உங்க வருவான். நான் காருக்குள்ள இருக்கிறன் வா” என்றான்.

“சரி வாறன்...” என ஒலி வாங்கியை அதனிடத்தில் பொருத்தி விட்டுத் திரும்பியபோது அங்கே நின்றிருந்த சொல்வி,

“நான் ஒண்டு கேட்பன் நீ தருவியா... ” என்றாள் மிகுந்த ஆதங்கத்தோடும்  ஏக்கத்தோடும்.

“ஹேய்... என்ன இப்பிடிக் கேக்கிறாய்... சொல்லு...” என்ற அருளானந்தன் அவளது இரு தோழ்களிலும் கைகளை ஆதரவாக வைத்தான்.

“எனக்கொரு ‘கிஸ்’ தா...” என்றவளது கண்கள் மீண்டும் பனித்தன.
உடனே சொல்வியை இழுத்து இறுக அணைத்து,

“I'm a stupid Sølvi, I'm so sorry...(நானொரு முட்டாள் சொல்வி... என்னை மன்னிச்சிடு...)” என்றவன், அவளது கழுத்தை ஒரு கையாலும் அவளது இடையை மறு கையாலும் இறுக அணைத்து ஆழமாக நீண்ட ஒரு முத்தம் கொடுத்தான்.
சொல்வியும் அவனை தனது இரு கைகளாலும் இறுக அணைத்துக் கொண்டாள்.

அணைப்பைத் தழர்த்தாமல் அவளது முகத்தருகே தனது முகத்தை வைத்து சொல்வியைப் பார்த்து,

“Oh... My... God... You smell sooo good... And in this lingerie, you look like an angel... (ஓ... கடவுளே... நீ நல்ல வாசமாயுமிருக்கிறாய்... இந்த உள்ளாடையோட நீ ஒரு தேவதை போலவும் இருக்கிறாய்...)” என்று அருளானந்தன் சொன்னபோது, சொல்வியின் முகம் மலர்ந்து, நாணத்தால் சிவந்தது.
சொல்வியும் அவனை இறுக இரு கைகளாலும் கட்டிப் பிடித்தபடியே நின்று கொண்டு,
“Thank You Arul...” எனச் சொல்லி, அவன் மார்பில் முகம் புதைத்தாள். அருளானந்தன் சொல்வியின் பொன்னிறக் கேசங்களை நுகர்ந்து அவளது உச்சியில் முத்தமிட்டான்.

“Hei, Can we have a quickie...? Before I go... (ஹேய், சின்னதா ஒண்டு செய்வமா... நான் போறதுக்கு முன்னால...) ” என்றான் ஆசையோடு அருளானந்தன்.
“ம்...ம்...ம்...” என சொல்வி அவனது மார்பிலிருந்து முகத்தை விலக்காமல் ‘ம்ம்ம்’ இராகம் இசைத்தாள்.

சொல்வி அசையாமல் அருளானந்தனின் அணைப்பில் சுகம் கண்டாள்.
“What do you say... My sweet angel...(என்ன சொல்றாய்... என் இனிய தேவதையே...)” என அருளானந்தன் சொல்வியின் காதுக்குள் கிசுகிசுத்தான்.

அருளானந்தனின் மார்பில் முகம் புதைத்திருந்த சொல்வி, திடீரென ஏதோ நினைவுக்கு வந்தவள் போல,  நிமிர்ந்து அருளானந்தனைப் பார்த்து,

“ரகு... வெளியில நிக்கிறான்... இப்ப வேண்டாம்... நீ வந்த பிறகு...” என்றாள் அருனாந்தனைத் தீர்க்கமாகப் பார்த்து சொல்வி.

“அவன் காருக்குள்ள இருக்கிறான்...” என அருளானந்தன் தொடருமுன், மீண்டும் அழைப்பு மணி அடித்தது.

சொல்வியை ஒரு கையால் அணைத்தபடி, மறு கையால் ஒலிவாங்கியை எடுத்து,
“நான் இப்ப வந்திடுறன் நில்லு...” என்றான் அருளானந்தன்.

அப்போ பிரதான வாசலில் நின்றிருந்த ரகு,

“நீங்க ரெண்டு பேரும் ‘அது’ செய்யுறதெண்டா செய்திட்டு வா... ஒரு பத்து பதினைஞ்சு...” என ரகு தொடருமுன்,

“ஹேய்... முட்டாள்... நான் கதவுக்குப்பக்கத்தில நிண்டு நீ மணியடிச்ச உடனே எடுக்கிறன்... என்ன சொல்லுறாய் நாங்கள் ரெண்டு பேரும் செய்யுறம் எண்டு...” என சொல்லிக்கொண்டே,
சொல்வியின் உதடுகளில் அருளானந்தன் தனது உதடுகளைப் பதித்தான்.

வாசலில் நின்றிருந்த ரகு ஏதேதோ சொன்னான். அதை அருளானந்தனோ அல்லது சொல்வியோ கேட்கவில்லை. கேட்கும் நிலையிலும் அவர்கள் இருக்கவில்லை.

அருளானந்தன், சொல்வியிடமிருந்து பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்று ஆள் உயர்த்திக்குள் (Lift) நின்று திரும்பிப் பார்த்தபோது, சொல்வி அவர்களது குடியிருப்பின் வாசலில் நின்று அருளானந்தனைப் பார்த்தாள்.

அருளானந்தன் ஒரு பறக்கும் முத்தம் தந்தான் சொல்விக்கு. பதிலுக்கு அவளும் ஒரு பறக்கும் முத்தம் தந்து கையசைத்து விடை கொடுத்தாள். அதற்கெனவே காத்திருந்தது போல, ஆள் உயர்த்தியும் தனது கதவுகளை மூடிக்கொண்டது.

சொல்வி உள்ளே வந்த உடனேயே தனிமையை உணரத் தொடங்கினாள். அவர்கள் சுவீடன் வந்திருந்த இவ்வளவு காலத்திலும் இதுவே முதல் முறையாக அருளானந்தனைப் பிரிந்து தனியே சொல்வி இருந்தாள்.

“இண்டைக்கு என்னால Universityக்குப் போகேலாது” எனத் தனக்குள் சொல்லியபடியே திரும்பவும் படுக்கையில்ப் போய் விழுந்தாள் சொல்வி.

அருளானந்தன் படுத்திருந்த தலையணையை எடுத்து அதில்த் தலை வைத்து, அருளானந்தன் கழற்றி கட்டிலில் எறிந்து விட்டுப் போன அந்த சாரத்தை எடுத்துத் தனக்கு மேல் போர்த்திக் கொண்டு படுத்தாள்.

ஆனால், அவளுக்கு நித்திரை வரவில்லை. நேரம் காலை மணி எட்டைத் தாண்டியிருந்தது.

சொல்வி நிமிர்ந்து அருளானந்தனின் சாரத்தைப் பார்த்தபோது, அருளானந்தனே அவளுக்கு மேல் படுத்திருப்பதைப் போல ஒரு பிரேமை வந்தது. அதனால் அவளது உடலெங்கும் உணர்வலைகள் கொந்தளிக்க தொடங்கியது.
அப்படியே அவனது தலையணையை எடுத்து மார்போடு இறுக அணைத்தபடி புரண்டு படுத்தாள். ஆனால், அவளுக்கு அதுவும் போதுமானதாக இருக்கவில்லை.

‘ச்சீ... என்ன இது ரெண்டு நாளில வந்துடுவான்... ரெண்டு நாள் என்னால பொறுக்க முடியாதா...’ எனத் தன்னைத் தானே சலித்துச்சொல்லிக் கொண்டாளே தவிர, அணைத்த அவனது தலையணையையும் விடவில்லை. அருளானந்தனது சாரத்தையும் நகர்த்தவில்லை. அவளால் இயலவில்லை. அப்படியே படுத்திருந்தாள்.

சிறிது நேரத்தில் மனதில் ஒரு உறுதியை வரவழைத்தவளாக படுக்கையிலிருந்து எழுந்து, அருளனாந்தன் கொணர்ந்த கோப்பியை எடுத்துப் பார்த்தாள். அது மிகவும் ஆறிப் போயிருந்தது.
அடுக்களை சென்று, கோப்பி வடிப்பானில் (Coffee maker) அருளானந்தன் வடித்து எஞ்சியிருந்த சூடான கோப்பியை தான் வைத்திருந்த குவளையில் நிரப்பி சிறிது உறிஞ்சிச் சுவைத்தபடி வந்தவள், படுக்கையிலிருந்த அருளானந்தனின் சாரத்தை வெறித்துப் பார்த்தபடி நின்றாள்.

அவளது உடல் முழுவதும் கோப்பி தந்த உஷ்ணத்தை விட, அவனது சாரம் அவளது பார்வை பட்டதும் தந்த உஷ்ணமே அதிகமாக இருந்தது. ஓடிச் சென்று அவனது சாரத்தை எடுத்து தனது உடலோடு அணைத்துக் கொண்டாள். அதில் அவள் கண்ட சுகத்துக்கோ அளவில்லை.

ஆம், பல நாட்கள் அருளானந்தனின் அணைப்பிற்காக ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தவள். அவன் இருக்கும் போதே அவனது உடைகளை எடுத்து இப்படி அணைத்து தனது ஏக்கங்களை நிறைவு செய்து, மகிழ முடியாமலிருந்தது.

இப்போதுதான் அவனில்லையே,

அவனது சாரத்தோடு, அவன் போர்த்துப் படுத்திருந்த தடித்த குளிர்ப் போர்வையையும் எடுத்துக் கொண்டு, கூடத்துக் வந்து அருளானந்தனின் சாரம், அருளானந்தனின் போர்வை என அடுக்காகத் தனக்கு மேல்ப் போர்த்துக் கொண்டு தொலையிக்கியால் (Remotecontrol) தொலைக் காட்சியை இயக்கினாள் சொல்வி.

தொலைக் காட்சியில் சுவீடன் நாட்டுக் காலைநேர அரட்டை இன்னமும் நிறைவுறவில்லை. அதைப் பார்க்கும் மனோ நிலையில் சொல்வி இருக்கவில்லை.
அவளது கண்கள் அருளானந்தனின் ஒளி-ஒலிப்பதிவு நாடா பெட்டிகள் அடுக்கி வைத்திருந்த அந்த அடுக்குத் தட்டில் (Shelf) ஓடியது. சொல்விக்குத் தமிழ்த் திரைப் படங்கள் பார்க்க விருப்பம். ஆனால் அன்று அதையும் சொல்வி விரும்பவில்லை.
அங்கே, 'Tamil film songs' என அருளானந்தன் எழுதி வைத்திருந்த நாடா அவளது கண் பார்வையின் ஓட்டத்தை நிறுத்தியது.
உடனேயே எழுந்து சென்று அதை எடுத்து ஒலி-ஒளிப் பதிவு நாடா இயக்கியில் (Video Cassette Recoder - VCR-) திணித்துவிட்டு, ஒரு வகை உற்சாகத்துடன் சோபாவில் (Sofa) படுத்துக் கொண்டு அருளானந்தனின் சாரத்தை எடுத்து ஒரு முறை முகர்ந்து தனக்கு மேல்ப் போர்த்தி குளிர்போர்வையைப் போர்த்தும்போது,
“Oh... my sweet sweet Asian Hercules... Your smell kills me... When will you come back and crush me... Oh... my dearest Arul” (ஓ... என்ர இனிய... இனிய... ஆசிய ஹேக்குலீஸ்... உன்ர வாசம் என்னைக் கொல்லுது... எப்ப நீ திரும்பி வந்து என்னை அணைச்சுக் கசக்குவாய்... ஓ... என்ர அன்பு... அருள்...) எனச் சொல்லிக் கொண்டே, VCR ஐ இயக்கினாள்...

அதில் வசந்தமாளிகை என்ற படத்தில் ‘மயக்கமென்ன...’ என்ற பாடல் தொலைக்காட்சியில் ஓடத்தொடங்கியது.
அந்தப் பாடலை வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தாள் சொல்வி...
அந்தப் பாடலில் வாணிஸ்ரீ அணிந்திருந்த சேலையைப் போல தானும் அணிய வேண்டும். அந்தப் பாடலில் சிவாஜி கணேசனைப் போல அருளானந்தனை உடை அணிய வைத்து, இந்த ஊர் முழுவதும் அவனோடு சுற்ற வேண்டும்... இந்த நாடு முழுவதும் சுற்ற வேண்டும்... என சிந்தனை ஓடியது சொல்விக்கு.

‘இதென்ன விபரீத ஆசை’ என நினைத்தவள் தனக்குள்ளேயே சிரித்துக் கொண்டாள்.

சில நிமிடங்கள் பாடலைப் பார்த்தபடியே இருந்த சொல்வி...
“ஏன் நாமிருவரும் அப்படி உடையணிந்து கொண்டு ஊர் சுற்றினாலென்ன யார் வந்து தடை சொல்லக்கூடும்...?” என சத்தமாகவே கேட்டுக்கொண்டாள் சொல்வி.
அப்படி நினைக்கும்போதே, உடலெல்லாம் ஒரு உன்னதமான உணர்வலை பரவுவதை உணர்ந்தாள்.
உடனேயே அந்தத் தடித்த போர்வைக்குக் கீழே இருந்த அருளானந்தனின் சாரத்தை எடுத்து நுகர்ந்து, ஒரு ஆழமான பெருமூச்செறிந்தாள் சொல்வி.

அந்த ஒளி-ஒலிப்பதிவு நாடாவில் இருந்த அத்தனை காதல்க் காட்சிகளிலும் வந்த இந்தியத் தமிழ் நடிகைகள் போல தானும் சேலை கட்டி உலகம் முழுவதும் சுற்றி வர வேண்டும் என ஆசைப்பட்டாள்.

அந்த ஒளி-ஒலிப் பதிவு நாடாவின் நேரம் முடிவடைவதற்குள்ளேயே சொல்வியை நித்திரை தழுவிக்கொண்டது.

இனிய கனவுகளோடு உறங்கிக் கொண்டிருந்த சொல்வியை நண்பகல் பதினொரு மணியளவில், தொலைபேசி எழுப்பியது.

அருளானந்தன்தான் தொலைபேசி எடுப்பான், என ஆவலோடு தொலைபேசியை எடுத்து,

“Haiii Sweeetiii... What's up...” என்றாள் சொல்வி, கொஞ்சும் குரலில்.

Hello, could I speak to mr. Arul please...(ஹெலோ... நான் அருளோட கதைக்கலாமா... )?”  என்றது ஒரு இளம்பெண் மறுமுனையில்...

(தொடரும்...)