Tuesday 5 May 2015

படிக்காத மனைவி. - பாகம் 3 - பிறந்த நாள்

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).


பிறந்த நாள்


அருளானந்தன், சொல்வி, ஹன்னா மூவரது பிறந்த நாட்களும் வந்து போனது இவர்கள் நோர்வேயில் இருந்தபோது. 
ஆனால் அவை ஹன்னாவின் வீட்டிலும் சொல்வியின் வீட்டிலும்தான் சில நண்பர்களோடு அருளானந்தனையும் அழைத்துக் கொண்டாடுவார்கள் மிக எளிதாக.
ஒவ்வொரு மாணவரது பிறந்த நாளும் வரும், ஆனால் ஒவ்வொருவரும் தத்தம் வசதிக்கேற்ப நண்பர்களை அழைத்துக் கொண்டாடுவார்கள்... 
அருளானந்தன் தனது அறையில் ஹன்னா, சொல்வியோடு சில நண்பர்களோடும் கொண்டாடுவான். சொல்வியே கேக் (cake) கொண்டு வருவாள். 

எந்தக் கொண்டாடமாக இருந்தாலும் எவ்வளவு எளிமையாக இருந்தாலும் மாணவர்கள் கூடும் கொண்டாட்டமாக இருந்தால்; அங்கே அதிர வைக்கும் இசையும் மது பானமும் முதலிடம் வகிக்கும்.

அருளானந்தன் தினம் தினம் மதுபானம் குடித்து, குடிபோதையில்த் திளைக்கும் குணம் இல்லாவிட்டாலும்; வைபவங்கள், கொண்டாட்டங்களில் மிதமாக மது அருந்தும் குணங் கொண்டவன். அதாவது, நிதானம் தவறாத அளவுக்குக் குடிப்பான். ஹன்னாவைப் போல வெள்ளிக்கிழமையானதும் போத்தலும் கையுமாக ஞாயிறு மாலைவரை திரிவதில்லை. சொல்வியும் ஹன்னாவோடு திரிந்தாலும் அளவோடு எதையும் செய்பவள்.

சுவீடன் வந்த பின்பு ஒரே ஒரு பிறந்த தினம் இருவரும் ஒருவருக்கும் சொல்லாமல், ஒருவருக்கொருவர் தங்களுக்குள் வாழ்த்துச் சொல்லிக் கொண்டார்கள்.

ஆனால், அருளனந்தனின் இந்தப் பிறந்த தினத்தை பெரிதாகக் கொண்டாட சொல்வி நினைத்தாள்.
அதற்கும் காரணங்கள் உண்டு.

சொல்வி தனது நிட்சயதார்த்தத்தை அறிவிக்க இது ஒரு சந்தர்ப்பம் என நினைத்தாள்...
அதை விட, இன்னொரு காரணமும் இருந்தது.

ஒரு நாள் தனது சுவீடன் நாட்டுச் சிநேகிதியிடம்; அருளானந்தன் அணிவித்த மோதிரத்தைக் காட்டினாள். அந்த சிநேகிதியின் தந்தை நகைக் கடை வைத்திருக்கிறார். ஆதாலால், அவளுக்கு நகைகளைப் பார்த்து அவற்றை மதிப்பிடத் தெரிந்திருந்தது. அவள்; அந்த சுவீடன் நாட்டுச் சிநேகிதி பார்த்தவுடனேயே அந்த மோதிரம் ஒரு ஐயாயிரம் குறோணருக்கு மேல் வரும். கடைக்கு வந்தால், சரியான மதிப்பீடு சொல்லலாம் என்றதும் சொல்வி ஆச்சர்யத்திலாழ்ந்தாள்.

அந்த மோதிரத்தை சொல்வி ஒரு ஆயிரம் குறோணர் அல்லது அதற்குள்ளேதான் வரும் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால், என்றுமே அருளானந்தனைக் கேட்டதில்லை.

நகைக்கடையில், அவள் சிநேகிதியின் தந்தை, அந்த மோதிரம் எண்ணாயிரம் தொடக்கம் பத்தாயிரம் வரை விலை பெறும் என்றதும், சொல்வியால் தனது கண்களையும் காதுகளையும் நம்ப முடியாமலிருந்தது.

சர்வ சாதாரணமாக, லஸன்யாவுள் புதைத்து என்னிடம் தந்த அந்த மோதிரத்தின் விலை பத்தாயிரம் குறோணரா என வியந்து போனாள்.

தன்னிடத்தில் அருளானந்தன் அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறான் என்பதை அந்த மோதிரம் மட்டுமல்ல, அவளது சிநேகிதியும் சொன்னாள்.

"ஹேய்... அவன் உன்னை உயிருக்குயிரா நேசிக்கிறான்... You are one of the luckiest girl on the earth... (நீ இந்த உலகத்திலிருக்கும் அதிர்ஷ்டக்காரிகளுள் ஒருத்தி...)" என்றாள்.

அருளானந்தனிடம் தனது எண்ணத்தை முதலிலேயே வெளிப்படுத்தினால், அவன் அதை மறுத்து விடக் கூடும்; என்பதால் இரகசிமாகவே எல்லாவற்றையும் செய்தாள் சொல்வி, அவளது சிநேகித, சிநேகிதியருடன்.

அருளானந்தனின் பிறந்த தினத்தன்று, சொல்வி காலையில் எழுந்து அருகே படுத்திருந்த அருளானந்தனை எழுப்பி, அவனது உதடுகளில் ஒரு முத்தம் கொடுத்து,

"Happy Birthday my dearest sweetie...(பிறந்தின வாழ்த்துக்கள் எனதன்பே...)" என்றாள்.
"Oh... Thank You... Thank You..." என்ற அருளானந்தன், அவளை இழுத்து திரும்ப ஒரு முத்தம் கொடுத்தான்.
சொல்வியின் முகத்தை தன் இரு கைகளாலும் ஏந்திப் பிடித்து,

"இண்டைக்கு யூனிவேசிற்றிக்குப் (university) போகம... எங்கயாவது ஊர் சுத்துவமா..." எனக்கேட்டான்.

உடனே, சொல்வி

"ஏன்... " என்றாள் ஒன்றும் தெரியாதவள் போல

"ஹேய்... இண்டைக்கு என்ர பேத்டே (Birthday)... எங்கயாவது போய் ஜாலியா இருந்திட்டு, றெஸ்ரோரன்ற்றில (Restaurant) சாப்பிட்டுட்டு, ஒரு மூவி (movie) பாத்தட்டு வருவம்" என செல்லமாகச் சொன்னான்...

"இண்டைக்கு யூனிவெசிற்றியில எனக்கு நிறைய வேலை இருக்கு. உன்னோட ஊர் சுத்த எனக்கு நேரமில்ல" என்றாள் எது வித சலனமுமில்லாமல் சொல்வி.

சொல்வியை இழுத்து தனக்கு மேல் படுக்க வைத்த அருளானந்தன், தனது இரு கைகளாலும் கால்களாலும் சொல்வியைக் கட்டிப் பிடித்துக் கொண்டு,

"நான் விடமாட்டன்... " என்று சொல்லி சொல்வியின் உதடுகளில் முத்தமிட்டான்.

சொல்வி, அருளானந்தனையே வைத்த கண் வாங்காமல் சில நொடிகள் பார்த்திருந்து விட்டு,
"சரி... பின்னேரம்... யூனிவேசிற்றிக்குப் போக வேணும்... நீயும் வர வேணும்... நிறைய றிசேச் (research) வேலை இருக்கு..." என்றாள் சொல்வி.

"OK... OK... பின்னேரம் போவம்... இப்ப இரண்டு பேரும் கொஞ்ச நேரம் இப்பிடியே படுத்திருப்பம்... பிறகு..." என அருளானந்தன் முடிப்பதற்குள்

"ஆ... நான் மாட்டன் அதுக்கு... அ...அ... இப்ப இல்லை..." எனப் பிடிவாதமாக மறுத்தாள் சொல்வி...

"ஹேய்... இண்டைக்கு என்ர பேத்டே... இண்டைக்குக்கூட ஒரு ஸ்பெஷல் (special)... இல்லையா..." எனக் கெஞ்சினான் அருளானந்தன்.

"ஸ்பெஷல்... எல்லாம் இரவுக்கு... இப்ப நல்ல பிள்ளை மாதிரி எழும்பிக் குளிச்சிட்டு வா... வெளியில போவம்..." எனச் செல்லமாகக் அவனது கன்னத்தில்க் கிள்ளி, ஒரு செல்லத் தட்டு தட்டி விட்டு, அருளானந்தனைப் பார்த்து கண் சிமிட்டினாள்.

"இப்பிடியே ஒரு பத்து நிமிஷம் படுத்திருப்பம் பிறகு... எழும்புவம்..." என்றான்.

"ஆ... ஹ... நீ பிறகு ஏதாவது குசும்பு செய்வாய்... நான் விட்டுத் தந்துடுவன்... முடியாது... என்ர செல்லமெல்லே... இரவுக்கு..." என அவனது உதடுகளில் இன்னொரு முத்தமிட்டுவிட்டு, அருளானந்தனின் கைகளை விலக்கி விட்டு எழுந்தாள் சொல்வி.

அருளானந்தன் போர்த்திருந்த போர்வையைப் பார்த்து விட்டு சிரித்தாள் சொல்வி.

"ஹேய்... இவ்வளவு அழகான தேவதை போல ஒரு பெண் பக்கத்தில படுத்திருந்தா, முனிவனா இருந்தாலுங்கூட, உடம்பெல்லாம் சூடேறியிடும்..." என்றான் அருளானந்தன் ஏக்கமாக சொல்வியைப் பார்த்தபடி

"சரி, முனிவரே... போய் நல்ல குளிர் தண்ணீல குளியுங்க... சூடு தணியட்டும்..." என்றாள், சொல்வி மிக நளினத்தோடு.

சொன்ன சொல்வி, குளியலறையை நோக்கி நடந்தாள்.

"நானும் வருவன் உன்னோட குளிக்க..." என்றபடி எழுந்து சொல்வியின் பின்னால் நடந்தான் அருளனாந்தன்.

"அங்க வந்து... தப்பு தண்டா... பண்ணூறேல்ல..." என்றபடி சொல்வி குளியலறைக்குள் நுளைய, அருளானந்தனும் அவளைப் பின் தொடர்ந்தான்.

சொல்வி பல் துலக்கியபடியே பின்னால் வந்த அருளானந்தனை முகம் பார்க்கும் கண்ணாடியில்ப் பார்த்து,

"இப்ப எங்கே போவம்...?" என்றாள்.

அவளது இடையை இரு கைகளாலும் கட்டிப்பிடித்து இறுக அணைத்த அருளானந்தன்,

"முதல்ல... போய் எங்கேயாவது... சாப்பிட்டுட்டு அதுக்குப்பிறகு யோசிப்பம்..." எனச் சொல்லி சொல்வியின் கழுத்தில் முத்தமிட்டான் அருளானந்தன்.

கூச்சலும் கும்மாளமுமாக ஒரு முக்கால் மணி நேரம் தண்ணீரில் குழந்தைகள் போல விளையாடிக் குளித்து முடித்த பின் சொல்வி உடலைத் துவட்டும்போது,

"நீ அப்பிடியே marshmallow (சீமைத்துத்தி) மாதிரி இருக்கிறாய்... உன்னை அப்பிடியே கடிச்சுச் சாப்பிட வேணும் போல கிடக்கு" என சொல்வியைப் பார்த்து அருளானந்தன் சொன்னான்.

ஒவ்வொரு நாளும் அவர்கள் அப்படி இருவரும் சேர்ந்து குளிப்பதில்லை, அப்படி இருவரும் சேர்ந்து குளித்தால்; ஒவ்வொரு தின் பண்டத்தின் பெயரைச் சொல்லி சொல்வியைக் கடிப்பதுபோல குறும்பு செய்வது அருளானந்தனின் வழமை.

இருந்தாலும், ஒவ்வொரு முறையும் சொல்வி அதை இரசித்து தனது உடலை அவனது பார்வையிலிருந்து மறைப்பாள். அந்தச் சின்னச் சின்ன சிலுமிசங்களை சொல்வி மிக இரசிப்பாள்.

"ஆ... ஹ... இப்ப என்னைச் சாப்பிட்டா... இரவுக்கு ருசிக்கிறதுக்கு என்ன பண்ணுவாய்...?" என தனது உடம்பை அந்தத் துவாயால் சுற்றிக் கொண்டு அறைக்கு வந்தாள்.

தன்பின்னால் தொடர்ந்து அருளானந்தனும் வருவானெனத் தெரியும்; இருந்தும் துவாயை கதிரையில் போட்டுவிட்டு, தனது மார்புக் கச்சையை (BRA) எடுத்து அணிய முற்படுகையில், அருளானந்தன் வந்து அவளை திருப்பி இறுகக் கட்டியணைத்து, அவளது இளஞ்சிவப்பு உதடுகளில் முத்தமிட்டான்.

இப்படியெல்லாம் தினமும் நடப்பதில்லை... ஏனெனில் அவசர அவசரமாகக் காலைக் கடன்களை முடித்து, பல்கலைக் கழகம் செல்பவர்கள். இப்படிப் பட்ட சரச விளையாட்டுக்களுக்கெல்லாம் அன்றாடம் நேரம் கிடைப்பதில்லை.

மாலை வேளையென்றால், உடல் களைப்பால் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்திருந்து தொலைக்காட்சியைப் பார்த்து விட்டு அப்படியே நித்திரைக்குச் சென்று விடுவது வழமை.
உடற்கூறுகளின் ஆதிக்கம் மிகும்போது, அருளானந்தனே சரசத்தில் ஆரம்பிப்பான். ஆனால், சொல்வியால் அன்று இயலாதென்றால் விட்டுவிடுவான்.

சுவீடன் வந்த ஆரம்பத்தில் இருவரும் உடலுறவில் முயல்கள் மாதிரித்தான் இருந்தார்கள். ஆனால் நாள்ச் செல்ல, நாள்ச் செல்ல அது குறைந்து விட்டது.

அவர்கள் இருவரும் படிப்பில் முழுக்கவனமும் செலுத்த ஆரம்பித்த போது, உடலுறவு வாரத்தில் இரு முறை அல்லது மூன்று முறை எனக் குறைந்து போனது.

சனி ஞாயிறுகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை... ஒன்றில் அருளானந்தனின் நண்பர்கள் வெள்ளி மாலையிலிருந்து அட்டகாசம் போடுவார்கள் அல்லது சொல்வியின் சிநேகிதிகள் சொல்வியின் அறையில் அட்டகாசம் போடுவார்கள். ஆக, இவர்களுக்கு இப்படி நேரம் கிடைப்பது எப்போதாவதுதான்.

அனேகமாக, அருளனந்தனின் நணபர்கள் என்றால் தமிழர்தான் அவனது அறைக்கு வந்து கும்மாளமடிப்பார்கள், தமிழ்ப் படங்கள் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் சொல்வி தனித்துப்போவள் .

எப்போதுமே அருளனாந்தனின் தமிழ் நண்பர்கள் கதையில் தகாத வார்த்தைப் பிரயோகம் சரளமாக இருக்கும். முதலில் சொல்வி இருக்கிறாளென பயந்தார்கள். ஏதாவது தகாத வார்த்தை சொன்னால் நாக்கைக் கடித்துக் கொள்வார்கள். ஆனால் போகப் போக அவர்கள் எல்லா வார்த்தைகளையும் ஒரு கூச்சமும் இல்லாமல் அவள் முன்னிலையிலேயே கொட்டி முழக்குவார்கள். அருளானந்தன் எவ்வளவோ சொல்லியும் அவர்கள் சுவீடன் மொழியிலோ அல்லது நோர்வே மொழியிலோ கதைக்கமாட்டார்கள்.

சொல்விக்கு தனது அறையில் இருக்கப் பிடிக்காது. காரணம் இவர்களது அட்டகாசமான சிரிப்பொலியும் கதையும்  அவளை அருளானந்தனின் அறைக்கு வரச் செய்துவிடும்.

அருளானந்தன் இயன்றளவு கதைகளை, நகைச்சுவைத் துணுக்குகளை சொல்விக்கு மொழி பெயர்ப்பான். ஆனால் எல்லாவற்றையும் அல்ல. எல்லாவற்றையும் அவளுக்குச் சொல்ல முடியாமலும் இருக்கும்.

இது சொல்விக்கு பெரியதொரு ஏக்கத்தையும் அச்சத்தையும் உண்டாக்கியது. அதாவது அவள் இலங்கை சென்றால், யாழ்ப்பாணம் சென்றால் அங்கே எல்லோரும் ஆங்கிலம் கதைப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. அதை அருளானந்தனே சொல்லியிருக்கிறான். அவள் யாழ்ப்பாணம் சென்றால், அங்கே வருவோர் போவோர், சொந்த பந்தங்களுடன் உரையாட அவளால் முடியாமல்ப் போய்விடும். அருளானந்தனின் தம்பி - தங்கை, பெற்றோர் கூட அவளுடன் உரையாடக் கஷ்டப் படுவார்கள். இதனால் அவனுடைய உறவுகள் அவளை ஒதுக்க ஆரம்பித்துவிடுவார்கள்.

இந்தப் பயம் சொல்வியைக் குடைய ஆரம்பித்தது. அவள் அதற்கு என்ன வழி என யோசித்தாள். தமிழ் கற்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற முடிவுக்கு வந்தாள் சொல்வி.

அந்த நேரம் அவள் தமிழ் கற்பதற்கு பாடசாலைகளில் தமிழ்ப் பாடம் என்று ஒன்று இல்லை. இன்று தமிழ்க் கல்விக் கூடங்களே ஆங்காங்கு இயங்குகின்றன.
பல அரச பாடசாலைகளில் தமிழ்ப் பாடமும் ஒன்றாக புகுத்தியிருக்கிறார்கள் இன்று.

ஒரு நாள் பல்கலைக் கழகத்திலிருந்து சொல்வி வந்தபோது, எதிரே அருளானந்தனுக்குப் பழக்கமான அந்த இந்தியப் பெண்ணும் அவளுடைய மகளும் வந்தார்கள். இவர்களிடம் கேட்டால், அவர்களது பிள்ளைகள் தமிழ் கற்கச் செல்லுமிடத்திற்கு தானும் செல்லலாம் என நினைத்து சொல்வி அவர்களிடம் கதைத்தாள்.

அந்த இந்தியப் பெண்; தானேதான் தனது இரண்டு பிள்ளைகளுக்கும் தமிழ் கற்பிப்பதாகவும், தான் சொல்விக்கு உதவுவதாகவும் சொன்னாள்.
ஆபத்தில் திரெபதைக்கு உதவிய கண்ணன் போல; சொல்வி அந்த இந்தியத் தமிழ் பெண்ணை நினைத்தாள்.

சொல்வி தமிழ் கற்பதோடு மட்டுமல்லாமல், இந்திய உணவுவகைகளையும் சமைக்கக் கற்றுக் கொண்டிருந்தாள். ஆனால் இந்த விடயம் அருளானந்தனுக்குத் தெரியாது.

சொல்வி, அருளானந்தனை அழைத்துக் கொண்டு கலாசாலையின் ஒரு கூடத்திற்கு வந்தாள்.

"என்ன... ஏன்... இங்க போறாய்?" என்றான் மிகுந்த குழப்பத்துடன்.

"மொனிக்காவிட்ட கொஞ்ச றீடிங்ஸ் (Readings - Data - தரவுகள்) எடுக்க வெணும்... எல்லாம் இந்த றூம்ல (room) வைச்சிருக்கிறன் எண்டவள்... சும்மா கத்தாமல் வா..." எனச் சொல்லிக் கொண்டே, சொல்வி அந்தச் சிறிய மாணவர் சேர்ந்திருந்து படிக்கும் அறையைத் திறந்தாள்.

"ஐயோ... இருட்டாயிருக்கு..." என சொல்லிக் கொண்டு சொல்வி பின்னே வர;

"சுவிச் (swich) கதவுக்குப் பக்கத்திலதானே இருக்கு..." எனச் சொல்லியபடி அந்த அறையினுள் நுளைந்து, அந்த மின் விளக்குகள் ஆளியை அமுக்கினான் அருளானந்தன்.

வெளிச்சம் வரும் வரை காத்திருந்த அருளானந்தனதும் சொல்வியினதும் சிநேகித சிநேகிதியர் ஒரு சேர

"SURPISE!!" என கோஷமிட்டனர். பின்னர்...
"HAPPY BIRTH DAY TO YOU!!!" என கோஷித்தனர்.

அருளானந்தன் திகைத்துப் போய் ஒரு கணம் ஸ்தம்பித்து நின்றாலும், சுதாகரித்துக் கொண்டு;

"THANK YOU... THANK YOU..." எனக் கூறிக் கொண்டு, மார்புக்கும் வயிற்றுக்கும் இடையில் வலது கையை வைத்து தலை குனிந்து அவர்களது வாழ்த்துக்களை ஏற்றான்.

பின்னர், அவன் பின்னால் புன்னகையோடு நின்ற சொல்வியைத் திரும்பிப் பார்த்து;

"இதெல்லாத்துக்கும் காரணம் நீதானே... வா... உனக்கு இருக்கு... உனக்கு..." என சொல்வியைப் பார்த்து சொல்லும் போதே,

"Happy Birth Day To You Arul..." என்றபடி நண்பர்கள் வந்து பரிசுப் பொருள்களைக் கொடுக்க, பிறந்த நாள் கொண்டாட்டம் ஆரம்பமானது.

விருந்துண்ணும்போதே, ஒவ்வொருவராக நண்பர்கள் அருளானந்தனைப் பற்றியம் சொல்வியைப் பற்றியும் சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பேசினர். பின்னர் வாழ்த்தினர்.

இடையில் சொல்வி எழுந்து,

"Happy Birthday to You Arul! (இனிய பிறந்ததின வாழ்த்துக்கள் அருள்!!) எனக்கு அருளானந்தனோடு கடந்த ஐந்து வருடங்களாக பழக்கம் இருந்து வருகிறது..." என சொல்வி தொடருமுன்...
"Come On... We know that... Tell us some juicy stuff... (இங்க... பார்... உதெல்லாம் எங்களுக்குத் தெரிஞ்சது... ஏதாவது கிளுகிளுப்பாய்ச் சொல்லு...)" என்றது ஒரு குரல் அப்போது ஒட்டு மொத்தமாக எல்லோரும்,
"Yeah... tell us something juicy... (ஒ,.. ஏதாவது கிளுகிளுப்பாய்ச்சொல்லு...)" என்றனர்.

சொல்வியின் முகம் நாணத்தால் சிவந்தது. இருந்தும் சளைக்காதவளாய்

"Come On... guys... It is our private... Isn't it... Come On...(இங்க பாருங்க... நண்பர்களே... அது எங்களோட அந்தரங்கம்... இல்லையா... )" என அருளானந்தனையும் பார்த்து ஏனையோரையும் பார்த்து நாணத்தோடும் சிவந்த முகத்துடனும் சொன்னாள் சொல்வி.

"We didn't ask anything on the bed... We ask something other than that... (நாங்கள் கட்டில்ல நடக்கிறதைக் கேட்கேல்ல... அதை விட வேறேதாவது...)" என்றது ஒரு பெண் குரல்.

"Come On... You girls always talk very intimate stuff... Come On... some outlines... Please Sølvi give us some cookies... (இங்க பாருங்க... நீங்க பெண்கள் எப்பவும் மிக அந்தரங்கமானவை கதைப்பீர்கள்... தயவு செய்து சொல்வி கொஞ்சம் கோடிட்டு காட்டு... ஏதாவது... சின்னச் சின்ன இனிப்புத்துண்டுகள்... தயவு காட்டு...)" என்றான் அவர்களில் ஒருவன்.

இப்போதும் சொல்வி ஏதாவது அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வேண்டும் என எதிர்ப்பார்த்தார்கள்.

அருளானந்தன் சிரித்தபடி செந்திராட்சை இரசத்தை உருசித்துக் கொண்டு, 'மாட்டிக்கிட்டியா... நல்லது என்னட்ட ஒரு வார்த்தை சொல்லியிருந்தா... இதுக்கெல்லாம் நான் உடன்பட்டிருக்கவே மாட்டன்...' என நினைத்துக் கொண்டான்.
சொல்வியோ விட்டுக் கொடுக்காமல்...
"நண்பர்களே... நீங்கள் எதுவேணும் எண்டாலும் அருளைக் கேளுங்கள்...  " என அருளானந்தனைப் பார்த்து ஒரு சிரிப்புடன் சொன்னாள் சொல்வி.

"No... No... இல்லை... இல்லை... அவன் எதுவும் எதைப் பற்றியும் எங்களுக்குச் சொல்லமாட்டான்... அவன் சொன்னான் "நான் சொல்விக்கு மதிப்பும் மரியாதையும் தருகிறேன். ஆதலால் நான் சொல்வி சம்பந்தப்பட்ட எதுவும் சொல்ல மாட்டேன்" என்று விட்டான்... please Sølvi..."
என்றான் ஒரு நண்பன்.

"Oh... so... sweeeet..." என்ற சொல்வி குனிந்து, அருளானந்தனின் கழுத்தைத் தன் வலது கையால் மிக ஆதரவாக அணைத்து அருளானந்தனின் கன்னத்தில் முத்தமிட்டாள்.  பின்னர் நிமிர்ந்து,

"அருளானந்தனிடம் எனக்குப் பிடித்ததது நிறைய இருக்கிறது. அவற்றில் இதுவும் ஒன்று... நான் உண்மையில்க் கொடுத்து வைத்தவள். " எனும் போது, அனைவரும்

"He is a great guy..." என்றார்கள். அருளானந்தன் சிரித்தபடி எழுந்து தலைதாழ்த்தினான்.

"OK... Sølvi... tell us something..." என்றது அதே பழைய குரல்.

"OK... OK... " என்று சொல்வி ஆரம்பித்தபோது, அனைவரும் அமைதியாயினர். சொல்வியின் வாயிலிருந்து முத்துக்கள் உதிரப் போகின்றன என்பது போல அனைவரும் அவளையே பார்த்தார்கள்.

"அருள் ஒரு நல்ல காதலர்...(Arul is a great lover...)" எனும் போது,
"படுக்கையிலா... அல்லது... பொதுவாகவா...?" என்றான் ஒருவன்
"படுக்கையிலும்... பொதுவாகவும்..." என்று சொல்வி சொல்லும் போதே சொல்வியின் முகம் செஞ்சாந்து பூசிக் கொண்டது. சொல்வி முகத்தை மூடிக் கொண்டாள்.
"Oh... Oh... Ha..." என அங்கேயிருந்த பெண் மாணவிகளெல்லாம் ஆச்சர்யப்பட்டு ஏக்கப் பெருமூச்செறிந்தனர்.

"வா...  தனிய... உன்னைக் குடைஞ்சு, எல்லா விஷயங்களையும் எடுக்கிறன்..." என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.
சொல்வி வெட்கத்தோடு அவளைப் பார்த்தாள். அனைவரும் சொல்வியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னைச் சுதாகரித்தவளாக சொல்வி தொடர்ந்தாள்.


தொடரும்...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...