Wednesday 13 May 2015

படிக்காத மனைவி - பாகம் 4 பிறந்த நாள் - தொடர்ச்சி...

இந்தக் கதை ஒரு 75 சதவிகிதம் உண்மை... மிகுதி 25 சதவிகிதம் கற்பனை.

அருளானந்தனோடு பரிசோதனைக் கூட பங்காளிகளாக இருந்த இரு பெண் மாணவிகளில் சொல்வியை (Sølvi ஓரளவிற்கு இந்தப் பெயரை 'சொல்வி' எனலாம்; ஆனால் அது சரியான உச்சரிபல்ல...) மிகவும் பிடித்திருந்தது. மற்றவள் ஹன்னா (Hanna).



பிறந்த நாள் - தொடர்ச்சி...



"அருள் ஒரு நல்ல காதலர்...(Arul is a great lover...)" எனும் போது,
"படுக்கையிலா... அல்லது... பொதுவாகவா...?" என்றான் ஒருவன்
"படுக்கையிலும்... பொதுவாகவும்..." என்று சொல்வி சொல்லும் போதே சொல்வியின் முகம் செஞ்சாந்து பூசிக் கொண்டது. சொல்வி முகத்தை மூடிக் கொண்டாள்.
"Oh... Oh... Ha..." என அங்கேயிருந்த பெண் மாணவிகளெல்லாம் ஆச்சர்யப்பட்டு ஏக்கப் பெருமூச்செறிந்தனர்.

"வா...  தனிய... உன்னைக் குடைஞ்சு, எல்லா விஷயங்களையும் எடுக்கிறன்..." என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.
சொல்வி வெட்கத்தோடு அவளைப் பார்த்தாள். அனைவரும் சொல்வியைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தன்னைச் சுதாகரித்தவளாக சொல்வி தொடர்ந்தாள்

"Arul takes care of me... (அருள் என்னைப் பார்த்துக் கொள்கிறார்.)" என்று சொல்லி சொல்வி தொடர முற்படுகையில்...

"What do you mean by that... (அதனர்த்தம் என்ன...)" என்றாள் சொல்வியின் சிநேகிதி ஒருத்தி.

"How do I describe...mmm... (எப்படி நான் விபரிக்க... ம்... ம்...)" என்று விட்டு...

"OK... OK... இப்போ... உதாரணமாக... எனக்கு சுகமில்லையெண்டா... நான் பேசாம படுத்திருக்கலாம் அருள் எல்லா உதவியும் செய்வார்... எனக்கு ஆறுதாலா இருப்பார்." என சொல்வி தொடர... 

எல்லோரும் மெளனமாக சொல்வியையே வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்கள். அருளானந்தன் சிரித்துக் கொண்டிருந்தான். சொல்வி அருளானந்தனின் முதுகில் தனது வலது கையால் தடவியபடியே தொடர்ந்தாள்...


"எங்களுக்குத் தெரியாத நிறைய விஷயங்கள் அருளின்ர கலாச்சாரத்தில இருக்கு... அதையெல்லாம் நான் அருளானந்தன் மூலமா தெரிஞ்சு கொண்டிருக்கிறன்... அனுபவிச்சுக் கொண்டிருக்கிறன்..." எனத் தொடரமுன்

"One of that is Karmasutra... isn't it?... (அதில ஒண்டு காமசூத்திரா... இல்லையா...)" என்றான் ஒருவன் அருளானந்தனைப் பார்த்துக் கண் சிமிட்டியவாறு...

"Yes... ஆனா... அதில்ல நான் சொல்றது..." என்றபோது, அனைவரும் ஆவலோடு 'இவளென்ன சொல்கிறாள்' என சொல்வியையே பார்த்தனர்.

"இப்ப... உதாரணமா... எங்களுக்கு மாதவிலக்கு வருமில்லையா..." என்றபோது,

"Ahh... what does he do for that... What do you do for her menses... Arul...? (அஹ்... என்ன அதற்கு அவன் செய்கிறான்... என்ன செய்கிறாய் நீ அருள் அவளின்ர மாதவிலக்கிற்கு...)" என்று கேட்டான் அருளானந்தனின் நண்பன் ஒருவன்.
அருளானந்தனுக்கு சிறிது வெட்கமும் கோபமுமாக இருந்தது. தலையைக் கவிழ்ந்து கொண்டு,

"Let her talk please... I totally do not like these...(தயவு செய்து அவளைக் கதைக்க விடுங்க... எனக்கு இது ஒண்டும் பிடிக்காது...)"என்றான் அருளானந்தன்.

"Arul... They our friends... Please not to be mad... They want to know how wonderful you are... (அருள்... அவர்கள் எங்களுடைய நண்பர்கள்... தயவு செய்து கோவிக்காத...நீ எவ்வளவு சிறந்தவன் என அவர்கள் அறிந்து கொள்ள விரும்புகிறார்கள்...)" என மிகவும் பணிவாக அருளானந்தனின் காதில் சொன்ன சொல்வி, தொடர்ந்து,

"அருளானந்தன் ஒரு நல்ல பண்புடையவர்... கலகலப்புடன் பழகுவார்... அவரோட இருந்தா கவலையே தெரியாது... சிரிக்க வைத்துப் பேசிக்கொண்டே இருப்பார்... அருளின்ர நல்ல குணங்களை சொல்ல நான் எடுத்த உதாரணம் சில வேளையில உங்களுக்கு விபரீதமா... அல்லது அருவெறுப்பாய்க் கூட இருக்கலாம்... ஆனா... என்னைப் பொறுத்த வரையில அதுதான் சிறந்த உதாரணம்... அருளைப்பற்றியோ அல்லது அருளின்ர தமிழ்க் கலாச்சாரத்தைப் பற்றியோ சொல்றதுக்கு..." என மூச்சு விடாமல் சொன்ன சொல்வி, 

மேசை மீது அவளுக்கு முன்னாலிருந்த கண்ணாடிக் குவளையில் நீரை நிரப்பி மட மடவெனக் குடித்தாள். சொல்வி தொடரும் வரை அங்கே ஒருவர்கூட ஒரு வார்த்தை பக்கத்தில் இருப்பவரிடம்கூடக் கதைக்காமல், சொல்வியையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.

மீண்டும் சொல்வி தொடர்ந்தாள்,
"எனக்கு மாதவிலக்கு நாட்களில் அருள் என்னை எதுவுமே செய்ய அனுமதிப்பதில்லை... எனது அறையில் மீன் தொட்டி கழுவி நீர் மாற்றுவதிலிருந்து எனக்கு உணவு தயாரிப்பது... இன்னும் என்னென்ன நான் செய்வேனோ அவையெல்லாம் அருள் செய்வார்... நான் தொலைக்காட்சி பார்த்தபடி அமர்ந்திருப்பேன்... நான் கேட்டதற்கு அவர் சொன்னார்... 'தங்களது கலாச்சாரம் அப்படியெனவும், மாதவிலக்கான பெண்களை தாங்கள் எந்த வேலையையும் செய்ய அனுமதிப்பதில்லையெனவும்... நீ இந்த நாட்டு பெண் என்பதால் நான் என்னை விட்டுத்தர தயாரில்லையெனவும்' சொன்னார்" என்ற போது, அனைவரும் பிரமித்துப்போய் அமர்ந்திருந்தனர்.

"Is he great guy or what..." என சிறிது நேரம் நிறுத்திய சொல்வி,

"OK...OK... இனி நான் சொல்லப் போற good news... everyone." என மிகுந்த மகிழ்ச்சியுடன் தொடர்ந்தாள் சொல்வி...
"நீங்க எல்லாம் என்ர வலது கையில ஒளி வீசும் வைரக் கல்லோட ஒரு 'றிங்கை' (Ring) கண்டிருப்பீங்க... எல்லாரும் சரியா யூகிச்சிருப்பீங்க... இருந்தாலும்;  இந்த இடத்தில நானே சொல்றதில எனக்கும் பெருமை... 
நானும் அருளும் திருமணம் செய்யிறதா முடிவு செய்திருக்கிறம்... This is my engagement ring (இது எனது நிட்சயதார்த்த மோதிரம்...)அருள்தான் போட்டே விட்டான்..." என சொல்லி சொல்வி தனது வலது கையை உயர்த்தி தனது மோதிரத்தை எல்லோருக்கும் காட்டினாள். அப்போது,

"Congratulations... You guys are made for each other... (வாழ்த்துக்கள்... நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் எனப் படைக்கப் பட்டிருக்கிறீர்கள்...)" என ஏகோபித்த குரலில் நண்பர்கள் வாழ்த்தினர்.

அருளானந்தனின் நண்பனொருவன்,

"No... Sølvi was made for me... Arul somehow stole from me (இல்லை... சொல்வி எனக்கா உருவாக்கப்பட்டவள்... அருள் எப்படியோ திருடிவிட்டான்...)" என்றான். எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். 

"This is the joke of the year... (இதுதான் இந்த வருடத்தின் நகைச்சுவை)" என்றான், இன்னொருவன்.

பரிசுப் பொதிகளைப் பிரித்துப் பார்க்கச் சொன்னார்கள்.

ஒரு பரிசுப் பொதி ஆணுறைப் பெட்டியைக் கொண்டிருந்தது. இன்னொன்று பாலியல் விளையாட்டு அதிரியைக் (Vibrator) கொண்டிருந்தது. மற்றுமொன்று காற்றடித்தால் பொம்மையாகும் பொம்மையைக் கொண்டிருந்தது. அதனோடு
'அவளுக்கு எல்லா நாளும் இயலும் என நினைக்காதே... அவளுக்கு இயலாத நாட்களில் இது உதவும்' என எழுதப்பட்டிருந்தது.

அதை அருளானந்தன் சத்தமாகவே வாசித்தான்... அப்போது, சொல்வியின் முகம் நாணத்தால் சிவந்தது. எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

ஒவ்வொரு பரிசுப் பொருளைப் பிரித்த போதும் அது பாலியல் சம்பத்தப் பட்டதாகவே இருந்தது. ஒவ்வொன்றுக்கும் பெரியதொரு சிரிப்பலை எழுந்து அடங்கியது.

ஒருவாறாக, அந்த வைபவம் நிறைவுற்றது.

அருளானந்தனும் சொல்வியும் வெளியே வந்த போது; அவர்களுக்காக ஒரு வாடகை வாகனம் (Taxi) காத்திருந்தது. சொல்வி எதுவும் சொல்லாமல் ஏறிக்கொண்டு,

"அருள்... வா..." என்றாள்.

"இன்னும் என்ன Surprise  வைச்சிருக்கிறாய்" என்றபடி காரினுள்ளே ஏறினான்.

ஒருவரும் ஒன்றும் சொல்லாமலே கார் (car) ஒடத்தொடங்கியது.

அருளானந்தன் சொல்வியின் கையை எடுத்து முத்தங் கொடுத்து;

"Thank You... for a wonderful party... you are the best... I love you... (ஒரு நல்ல வைபவத்திற்கு நன்றி... நீ மிகச் சிறந்தவள்... நான் உன்னைக் நேசிக்கிறேன்... )" என்று சொல்வியை அணைத்து அவளது உதடுகளில் முத்தமிட்டான்.

வாடகை வாகனம் (Taxi) Best Western Hotelக்கு முன் நின்றது.

சொல்வி காருக்கான கட்டணத்தைக் கொடுக்க முற்படுகையில் அருளானந்தன் தடுத்துவிட்டு; தானே அந்தக் கட்டணத்தைச் செலுத்தினான்.

"இங்க எதுக்கு..." என்றான் அருளானந்தன்.

"வா... சொலறன்..." என்றபடி முன்னே நடந்து சொல்வி, பணிப் பெண்ணிடம் ஒரு அறை திறக்கும் அட்டையைப் பெற்றுக் கொண்டாள்.

இருவரும் அறைக்கு வந்தபோது;

"இதெல்லாம் வீண் செலவு சொல்வி..." என்றான் அருளானந்தன். அப்போது, சொல்வி தனது வலது கையின் மோதிர விரலையும் மோதிரத்தையும் இரகசியமாகப் பார்த்துவிட்டு,

"Arul... don't be silly... (அருள் சிறுபிள்ளைத்தனமாக இராதே...)" என்றவள்.
அருளானந்தனை அணைத்து ஆழமாக முத்தமிட்டு, அவனை இழுத்துச் சென்று கட்டிலில் அமர வைத்துவிட்டு,

"இரு... நான் உடை மாத்திக் கொண்டு வாறன்" என்று சொல்லிக் கொண்டே குளியலறைக்கு நடந்தாள் சொல்வி.

"ஏன் பாத்றூமுக்கு... (Bathroom) எத்தின நாள் எத்தின ஆயிரம் தரம் உன்ன உடுப்பில்லாம பாத்திருப்பன்." எனச் சொல்லி சொல்வியைப் பார்த்தான் அருளானந்தன்.

"ம்... உனக்கு முன்னால உடுப்பு மாத்தலாம் ஆனா நீ என்னை விடமாட்டியே..." என குளியலறை வாயிலில் நின்று சொன்னவள்,

"ஹேய்... அந்த இடத்திலயே இருக்கவேணும்... உள்ளுக்கு வந்தாய்... நடக்கிறது வேற..." எனச் சொல்லிவிட்டு குளியலறை சென்ற சொல்வி குளியலறைக்குத் தாள்பாழ் இட்டுக் கொண்டாள்.

"எப்ப நீ பாத்றூம் கதவைப் பூட்டத் தொடங்கினனீ..."என்றான் அருளனந்தன் மிகுந்த ஆதங்கத்துடன்.

"இந்த விஷயத்தில... நான் என்ன சொல்லி நீ என்ன கேட்டிருக்கிறாய்... உன்ர குணம் தெரிஞ்சதுதானே..." என்றாள் சொல்வி குளியலறையில் இருந்தபடியே...

"I love you... (நான் உன்னை நேசிக்கிறன்...)" என சற்று பலத்த குரலில் சொன்னான் அருளானந்தன்.

"I love you too... (நானும் உன்னை நேசிக்கிறன்...) அதனாலதான் இண்டைக்கு கதவைப் பூட்டின்னான்

அருளானந்தான் கட்டிலின் எதிரே இருந்த தொலைக் காட்சிப் பெட்டியை இயக்கி ஏனோ தானோ எனப் பார்த்துக் கொண்டிருந்தபோது,

குளியலறைக் கதவைத் திறந்து சொல்வி வெளியே வந்தாள். 
சொல்வி, Victoria's Secrets இலிருந்து தருவித்த செந்திராட்சை இரச சிவப்பிலான  பளபளப்பான ஒண்பட்டுத்துணியில்த் தைத்த உள்ளாடையை (lingerie - The Angel Lace & satin slip - ) அணிந்திருந்தாள்.  அது ஏறத் தாழ அவளது தொடைகளை மறைப்பனவாகவும் மிகவும் தளர்ந்தும் இருந்தது.

அருளானந்தன் வைத்த கண் வாங்காமலும் திறந்த வாய் மூடாமலும் சொல்வியையே பார்த்த வண்ணம் இருந்தான். அந்த உள்ளாடையின் பெயருக்கேற்ப அந்த உள்ளாடையில் ஒரு கவர்ச்சி தேவதையாகக் காட்சியளித்தாள் சொல்வி.

சொல்வியோ அருளானந்தனைப் பார்த்துச் சிரித்தபடி இரு முறை வேகமாக சுழன்றபோது, அந்த உள்ளாடை அரைவரை விசிறி போல உயர்ந்து விழுந்தது.

அப்போது, அருளானந்தன் கட்டிலில் துள்ளியெழுந்திருந்து கொண்டு,

"Once more... Once more... Please..." என்றான்.

அருளானந்தனுக்கு ஒரு பறக்கும் முத்தம் தந்த சொல்வி, திரும்பவும் இரு முறை சுழன்றாள்.

"How is it...?" எனக் கேட்டுக் கொண்டே அருளானந்தனிடம் வந்தாள்.

"Soooo Beeeeauuuuutiful... Sooooo sexy... You are an angel... This is the best Birthday gift ever...(மிகவும் அழகாயிருக்கு... மிகவும் கவர்ச்சியாக இருக்கு... நீ ஒரு தேவதை... இதுதான் மிகவும் சிறந்த பிறந்த தினப் பரிசு...)" எனச் சொல்லி சொல்வியின் இடையை தன் இரு கைகளாலும் அணைத்து அவளது வயிற்றில் முத்தமிட்டான்.

அருளானந்தனைக் கட்டிலில் தள்ளிவிட்டு, அவன் மீது ஏறி முத்தமிட்ட சொல்வி எட்டி கட்டில் தலைமாட்டில் இருந்த மின் விளக்கு ஆழியை அமுக்கி மின் விளக்குகளை அணைத்தாள்.   

"ஹேய்... நான் உன்னைப் பாக்கேலாது இருட்டில..." என அருளானந்தன் சொல்ல,

"Show is over... now kissing time...(காட்சி முடிந்துவிட்டது... இப்போது கொஞ்சும் நேரம்...)" என சொன்ன சொல்வி அருளானந்தனை அணைத்து முத்தமிட்டாள்.

மறுநாள்க் காலை பத்து மணியளவில் கண் விழித்த அருளானந்தன்,

"சொல்வி... சொல்வி... எழும்பு... " என அவசரமாக எழுப்பினான்.

"Good morning sweetie..." என அருளானந்தனை அணைத்து முத்தமிட்டாள் சொல்வி.

"ஹேய்... நாம் இப்போ றூமை (Room) விடேல்ல எண்டா... அவங்கள் ரெண்டு நாள் காசு போட்டுடுவாங்கள்..." எனப் பதறினான் அருளானந்தன்.

"Relax... I paid for two days... (ஆறுதாலயிரு... நான் இரண்டு நாட்களுக்கு கட்டணம் செலுத்திவிட்டேன்...)" எனச் சொல்லி அருளானந்தனை இழுத்து இறுக அணைத்தாள்.
"அப்போ... நேற்று விட்ட மிச்சம் இப்ப தொடருவமா..." என ஆவலாகக் கேட்டான் அருளானந்தன்.

"நான் மாட்டனெண்டா சொன்னனான்... " என்றவள்,

"அதுக்கு முன்னம் நான் ஒண்டு கேட்பன் நீ கோவிக்கக் கூடாது..." எனப் பீடிகை போட்டாள் சொல்வி.
"ஹேய்... நானெப்ப உன்னோட கோவிச்சனான்" என்றான் அருளானந்தன்.

"நாங்க ரெண்டு பேரும் தனி ஒரு அப்பாட்மெனற் (Apartment) எடுத்து ரெண்டு பேரும் ஒண்டாயிருந்தாலென்ன..." என சொல்வி முடிப்பதற்குள்

"I love you... I love you... I love you..." எனச் சொல்லி சொல்வியை முத்தமிட்டான்.

"ஹேய்... நான் கேட்டதுக்குப் பதில் சொல்லாம... 'I love you ' எண்டா என்ன அர்த்தம்" என சிரித்தபடி கேட்டாள் சொல்வி.

சொல்விக்கு அதனர்த்தம் விளங்கியிருந்தபோதும், அதை அருளானந்தனின் வாயால் கேட்க வேண்டுமென்ற ஆவல்.

"அதின்ர அர்த்தம்... எனக்கும் விருப்பம் எண்டததுதான்... நானும் இதை உன்னட்ட கேக்க வேணும் எண்டு நிறைய நாள் யோசிச்சனான்..." எனச் சொல்லி சொல்வியின் முகத்தை இரு கைகளாலும் ஏந்தி முத்தமிட்டான் அருளானந்தன்.

"நான் நினைச்சன் உங்கட கலாச்சாரப்படி நாங்க ரெண்டு பேரும் சேர்ந்திருக்கிறது பிழையெண்டு சொல்லுவாயெண்டு..." என சொல்வி வியப்புடன் சொன்னாள்.

"எங்கட கலாச்சாரப்படி, நான் ஒரு பொம்பிளையை தொடூறதே பிழை... அவளை நான் கலியாணங் கட்டூறதாயிருந்தாக் கூட, கலியாணத்துக்கு முன்னம் தொடவே ஏலாது... சிலர் தனியச் சந்திக்கிறதையே அனுமதிக்கிறேல்ல... நான் எங்கட கலாச்சாரத்தைத் தாண்டி வந்து, எவ்வளவோ காலமாச்சு..." என்றான் அருளானந்தன்.

"அப்ப உன்ர அப்பா அம்மா..." என சொல்வி தொடருமுன் இடை மறித்த அருளாந்தன்,

"அதுகளெல்லாம் இப்ப என்னத்துக்கு... நாங்க ரெண்டு பேரும் ஒரு அப்பாட்மென்ற் (Apartment) பாப்பம்"என்றான்...

"என்ர பிரெண்ட் (friend Linda) லின்டாவின்ர அப்பாவுக்குச் சொந்தமா ஒரு அப்பாட்மெனற் ற்ரவுணுக்க (Town) ப்றீயா (free) இருக்காம்... றென்ற்றும் (Rent) குறைவு..." எனச் சொல்வி சொல்ல,

"Did I tell you that you are my angel... (நீ என்ர தேவதையெண்டு சொன்னனானா...)" எனச் சொல்லி சொல்வியின் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தான் அருளானந்தன்.



தொடரும்...

No comments:

Post a Comment

எனது வலைப் பதிவில் யாரும் பின்னூட்டம் இடலாம்... உங்களது பின்னூட்டங்கள் பரிசீலனையின் பின்னர் இங்கே இடம் பெறும்...
தங்கள் வருகைக்கு எனது நன்றிகள்...